Other Articles
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
No Rajini Birthday Celebration in 2008

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
சன் டிவியில் ரஜினி
(Monday, 1st December 2008)

22.4.1996. திங்கள் கிழமை. நேரம் சரியாக எழு மணி. அடுத்த வந்த இருபது நிமிஷங்களில் தமிழ்நாட்டு அரசியலின் தலையெழுத்து மாறியது.

தேர்தலுக்கு ஆறு நாட்களே இருந்த நேரத்தில் யாருமே எதிர்பார்க்காத அதிரடி அரசியல் சரவெடி.  சன் டிவியில் சூப்பர் ஸ்டார் நிகழ்த்திய உரை திமுக தமாக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

டி.வி பிரச்சாரம் என்பதெல்லாம் அதுவரை தமிழ்நாடு பார்த்திராத விஷயம். தேர்தல் பிரச்சார மேடைகளில் அடுக்கு மொழியில் பேசி அனைவரையும் வசப்படுத்துவதில் கெட்டிக்காரரான அறிஞர் அண்ணாதுரைக்கே கிடைத்திராத வரவேற்பும், பாராட்டுதல்களும் ரஜினிக்கு கிடைத்தன.

இத்தனைக்கும் ரஜினியின் பிரச்சார பேச்சு திடீரென்று முடிவு செய்யப்பட்டடதுதான்.  வார்த்தை அலங்காரங்கள் எதுமின்றி கைககைளை பரபரவென்று தேய்த்துக்கொண்டு மனம் திறந்து பேச வந்தார் சூப்பர் ஸ்டார். ரஜினியை எதிர்த்து நின்ற விக்கெட்டுகளும் மளமளவென்று சரிந்தன. 

அப்படி என்னதான் பேசினார் சூப்பர் ஸ்டார்? வழக்கம்போல் இடைச்செருகல் எதுவுமில்லாமல் அப்படியே தருகிறோம்.

' எல்லோருக்கும் வணக்கம்

மதிப்பிற்குரிய அரசியல் மூத்த தலைவர் கலைஞர் அவர்களுக்கும் பெரியவர் மூப்பனார் அவர்களுக்கும் என் வணக்கம்

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கம் தமிழக மக்களுக்கும் என் அன்பான வணக்கம்

இது எனக்கு ரொம்ப புது அனுபவம். ஆண்டவனோட நாடகத்துல எனக்கு கிடைச்சிருக்கிற பாத்திரம்

நான் அரசியல்வாதி ஆகாமலே அரசியல்வாதியாகிவிட்டேன்

நான் வாழ்க்கையில் எல்லாத்தையும் பார்த்துட்டேன்.  எல்லாத்தையும்னா வறுமை, பெருமை, புகழ், பணம் எல்லாத்தையும்.

இப்போ அரசியலையும் பாருன்னு ஆண்டவன் என்னை அனுப்பி வெச்சிருக்கார்.

நான் மறுபடியும் சொல்றேன். முக்கியமா சகோதரி ஜெயலலிதா மேல எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த துவேஷமும் கிடையாது. நாம அவரிடம் ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனா ஏமாற்றம்தான் கிடைச்சுது. எதிர்பார்த்திருக்கக்கூடாது. எதிர்பார்த்ததினால தான ஏமாற்றம் கிடைச்சது.

பாட்ஷா படத்து விழாவுல நான் பேசினேன். அதுக்கு மக்கள் ஆதரவு ஏன் அவ்வளவு வந்ததுன்னு எனக்கு புரியலை. என் மீது மக்கள் ஏன் இவ்வளவு அன்பு, பாசம் வைச்சிருக்காங்க. அதுவும் புரியலை.

எனக்கு அரசியல்ல கொஞ்சமும் இஷ்டமில்லை. அரசியல்னா கரெக்டா செய்யணும். சரியான கூட்டணி அமையும்னு நினைச்சேன். அதற்காக பிரதமர் பெரியவர் நரசிம்மராவை மூன்று முறை நேரில் சந்தித்தேன். பல தடவை போனிலும் பேசினேன்.

சொல்ல வேண்டியதைச் சொன்னேன். எது அவசியமோ அதைச் சொன்னேன்.

இந்த ஆட்சி சரியில்லை. ஜெயலலிதா சரியில்லை. நடவடிக்கை எடுக்கணும்னு சொன்னேன். நான் அவரிடம் என்னென்ன சொன்னேன் என்பதையெல்லாம் இப்போது முழுசா சொல்ல  முடியாது.

ஒரு கட்டத்தில எம்ஜிஆர் முன்னணியோட கூட்டணி வைத்தால் நீ அரசியலுக்கு வருவாயா என்று நரசிம்மராவ் என்னிடம் கேட்டார். நான் வரவில்லை என்று சொன்னேன். அதற்காக நான் பல முயற்சி எடுத்தேன். அது முடியாதபோதுதான் என் படத்தையோ என் பெயரையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு போனேன்.

உறுதியாக ஒன்றை நினைத்தேன். நரசிம்மராவ் திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்வார் என்று நினைத்தேன்.

கலைரும் நரசிம்மராவும் மூப்பனாரும் இணைந்து விட்டால் அப்போது என் படம் தேவையில்லை என்று நினைத்தேன். அப்படி இல்லையென்றால் காங்கிரஸ் தனியே நிற்குமென்று நினைத்தேன். ஆனால் இங்கே இப்படி நடக்குமென்று தெரியாது'

தொடரும்...

தொகுப்பு :  ஜெ. ராம்கி


 
10 Comment(s)Views: 5570

Ravi,Mumbai
Friday, 5th December 2008 at 08:31:55

Its true..that time Rajini's speech gave impact on Tamilnadu Politics. but please dont compare..Annadurai and Rajinikanth..its not good..to compare with that much big Politcian..Please try to avoid...
hari,india,tamilnadu,k.k.dist,mondaikad
Thursday, 4th December 2008 at 01:56:34

thalaivar yeav valzhiyae avvalzhiyae naaanum,,, i luv thalaivar soooooo much.
SL Boy,Sri Lanka
Wednesday, 3rd December 2008 at 08:49:00

please translate into english pleaseeeeeeeeeeee
its the ultimate punch!! please post the video clip,Singapore
Tuesday, 2nd December 2008 at 19:58:59

It's the ultimate punch!! please post the video clip
Ananth,Indianapolis IN, USA
Tuesday, 2nd December 2008 at 09:12:15

This is thalaivar's best. Do you have the video of it?. If so please post it.

Thanks
Ananth

thulasirajan,india/chennai
Tuesday, 2nd December 2008 at 05:09:45

thalaivar endrumea arasiyal veandam yendruthan sollikondu irukkirar, anal nan nenaipatho enn thalaivan aatchil vala veandum enbathea, antha natkal tholaivi illai. valgha thalaivar!!!!!
shravan,
Monday, 1st December 2008 at 22:45:15

தலைவர், எந்த பேட்டியிலோ (1975 முதல்) , எந்த மேடையிலோ அவர் அரசியலில் ஆர்வம் உண்டென்று சொன்னது கிடையாது.. பத்திரிகைகளும், மீடியாக்களும் தான் ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உண்டு பண்ணியது. That's their Business.. But they should have avoided that table journalism... Atleast with a man who never even oppose or give answers back... nor grew enemity with the media associates...
Siva,Mysore
Monday, 1st December 2008 at 18:26:20

Guys, Thalivar has very clear told then he has no interst in politics... but we have always misread him... my thing is Thalivar has a mass following so he should use it for people's welfare by any means that reaches ppl..
Raja,
Monday, 1st December 2008 at 17:54:48

ராம்கி கலக்கிட்டீங்க. 12 வருசம் கழித்து படிக்கும் போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இதுவரை எந்த அரசியல் பேச்சும் இந்த அளவுக்கு மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானதில்லை. பல பேருக்கு தாமாகாவின் சின்னம் அன்னாமலை சைக்கிள் என்று சொன்னால் தான் தெரிந்தது.
vinod,INDIA,chennai
Monday, 1st December 2008 at 14:54:20

please translate in English.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information