Other Articles
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
No Rajini Birthday Celebration in 2008
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
‘Sultan’ worldwide release on April 14th!
Sathyanarayana rested from Rajini fan club!
சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
எந்திரன்: கழிந்தது முதல் திருஷ்டி!
ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்
Thaai Veedu was a pakka commercial movie

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி பதில்கள் - 2
(Wednesday, 26th November 2008)

சூப்பர் ஸ்டாரின் பரபரப்பான பதில்கள் தொடர்கின்றன.

13. பாரதியார், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் இவர்களை பற்றி ஒவ்வொரு வரி கூறுங்கள்.  (தாமஸ், திருவனந்தபுரம்)

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றால் ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழுங்கிய  ரெபெல் பொயட் பாரதியார்

பெரியார், தன்னை நாத்திகன் என்று அழைத்துக்கொண்ட மிகப்பெரிய ஆன்மீகவாதி

உண்மையான படிக்காத மேதை காமராஜர்
 
மாபெரும் தலைவர் அண்ணா

எம்.ஜி.ஆர் நடிகர் குலத்துக்கே மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்தவர்.

14. ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? (வீ. நாராயணி, திருத்துறைப்பூண்டி)

(சிறிது யோசனைக்குப் பின்னர்) அவங்களுடைய தன்னம்பிக்கை.

15. அரியாசனத்தில் அமர்ந்து ரசிப்பது, ஆண்டியாய் உலகத்தை சுற்றுவது. இதில் எது அதிக இன்பம்? (சரவணன், திருச்சி)

ஒண்ணுதான் பார்த்திருக்கேன். இன்னொன்னு பார்க்கலை. ஒரு வேளை அதையும் பார்த்தால் அதுக்கப்புறம் எதில இன்பம்னு சொல்றேன்.

16. மனிதன் எப்போது மகானாகிறான்? (பி. சாந்தா, மதுரை)

தன்னைத் தான் உணரும்போது.

17. உங்களின் உடலை எடை போடாமல் எப்படி கச்சிதமாக வைத்துக்கொள்ள முடிகிறது?  ( கஜேந்திரன், பொள்ளாச்சி)

கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் உறக்கம். கொஞ்சம் உடற்பயிற்சி. கொஞ்சம் யோகா. கொஞ்சம் தியானம். எல்லாத்துக்கு மேல் ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்பு.

18. எப்போதாவது கண்ணாடியில் சிவாஜிராவை பார்த்ததுண்டா? (ஆன்ந்த், கடலுர்)

சிவாஜி ராவை பார்க்காத நாளே கிடையாது.

19. சில அரசியல் தலைவர்கள் நம் தமிழ்நாட்டை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? (செல்வம், திண்டிவனம்)

வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

20. அப்பா, அம்மா செய்த புண்ணியம் குழந்தைகளை வந்து சேரும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா? (வேதவல்லி, திருவல்லிக்கேணி)

அதிலே எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அவங்கவங்க செய்த பாவ, புண்ணியம் அவங்கவங்களைத்தான் போய்ச்சேரும்.

21. அடிக்கடி மேல்நாடு போறீங்களே தலைவா... மேல்நாட்டு மக்களோடு இந்திய மக்களை ஒப்பிட முடியுமா?  (பாலகிருஷ்ணன், சிங்கப்பூர்)

செண்டிமெண்ட், அட்டாச்மெண்ட். இந்த சொந்தம் பந்தமெல்லாம் அங்கே கிடையவே கிடையாது. அதனால அவங்க கஷ்டப்படுறாங்க. இந்த செண்டிமெண்ட் அட்டாச்மெண்டெல்லாம் இங்கே ரொம்ப ஜாஸ்தி. அதனால நாம கஷ்டப்படறோம்.

22. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி (ராம் மணி, ராஜபாளையம்)

காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடக்கிற மாதிரி.

23. உங்கள் கருத்தை என்றைக்காவது யாருக்காகவாது மாற்றியதுண்டா? (சி. தெ. ரஜினி அருள், மணக்காடு)

இல்லவே இல்லை.

24. முதன்முதல் உங்களுக்கு அறிவுரை சொன்னது யார்?  (கே. தேவி, பூநகரம்)

எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே முதன்முதலா அறிவுரை சொல்றது தாய்தான்.

25. நீங்கள் அடிக்கடி இமயமலைக்கு எதை நாடி செல்கிறீர்கள்?  (என். சுப்ரமணியன், கல்கத்தா)

என்னை நான் நாடிச் செல்கிறேன்.

தொடரும்....

தொகுப்பு :  ஜெ. ராம்கி

 


 
17 Comment(s)Views: 4650

hari,india,tamilnadu,k.k.dist,mondaikad
Thursday, 4th December 2008 at 02:01:08

thalaivaaaa neenga mattum thaan best baakki yellorumae worst .
Rukesh,chennai
Friday, 28th November 2008 at 15:17:13

Thalaivai you are the best hero in tamil film industry...............no one is there to beat u...
kiran,bangalore
Friday, 28th November 2008 at 09:33:39

Hi,

Please put news in English Because I dont know tamil
I am very much intrested with our superstar news. I am missing lot of new our thalivar.
Ragards
kiran

SL Boy,Sri Lanka
Thursday, 27th November 2008 at 08:19:13

supeerrrrb
Rajini sir you are the best...
I never seen a king like this..

T.JAWAHAR,TIRUPUR, INDIA
Thursday, 27th November 2008 at 05:15:31

வணக்கம் திரு."nattu" அவர்களே. உங்களையும் தான் காணவில்லை பல மாதங்களாக...


pls call me nattu
jawahar.t

jude,sri lanka/ colombo
Thursday, 27th November 2008 at 03:40:19

வரவேற்கத்தக்கது. சரியாத்தான் சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டை ஒரு செட்டியாரோ, முதலியாரோ, கவுண்டரோ, தேவரோ, பிராமினோ அல்லது நான் பிராமினோ ஆளவேண்டும் என்று சொல்லலையே. ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் என்றுதானே சொல்லியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை தமிழ் பேசுபவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள்தான்.

Supereb Thala!

jegannathan[madurai],india
Thursday, 27th November 2008 at 01:30:30

thalaiva,
thank u for ur valuable coments on god... You must enter into politics to change our state into a global one

Boss Rasigan,Pennsylvania, USA
Wednesday, 26th November 2008 at 23:29:36

To all Rajini fans: Let's stand united and show our support to Mumbai brothers and sisters. I'm shattered by these attacks. God, please give peace to my country and country people. Jaihind!
saravanan,tirupur
Wednesday, 26th November 2008 at 23:12:54

இது என்னுடைய வேண்டுகோள். தலைவரின் சிங்கப்பூர் ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் வீடியோ காட்சிகள் இருந்தால் தயவு செய்து ஒளிபரப்பவும்.

I am very eager to watch the world's SUPER STAR stage performance.

Thirunavukkarasu,karur
Wednesday, 26th November 2008 at 22:49:40

தலைவரின் பதில்கள் சூப்பர்............
imraan,india/tirunelveli
Wednesday, 26th November 2008 at 22:43:33

THALAIAR's answer for d questions 19,21,22,24 r really gr8..............
Shekar,India
Wednesday, 26th November 2008 at 22:04:55

Ramki excellent. We are looking forward to your write up. You are genious. Pls contribute to Rajinifans. I have seen some other Rajini fans site but they over exgerrate but only rajinifans.com gives stable news. Keep it up!
Murale P M,India/ Chennai
Wednesday, 26th November 2008 at 20:49:49

தியானம் பற்றி தலைவர் சொல்படி நானும் கற்று இபொழுது அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறேன் இப்பொழுது ஈஷா யோகா மையம் திருவல்லிக்கேணியிலும் , தொடர்ந்து மைலாப்பூரிலும் வகுப்புகள் தொடங்க இருக்கிறார்கள் , அதை ஒட்டிய பதிவை உங்கள் இணையத்தளத்தில் போடமுடியும் என்றால் , அதன் மூலம் நம் ரசிகர்கள் பயன்பெறுவார்கள் எனபது உறுதி , மேலும் நம் தலைவர் வழி நடக்க நாமும் ஒரு அடி எடுத்து வைதூம் என்ற மனநிறைவும் இருக்கும் ,

இந்த வேண்டுகோள் நம் நண்பர் சுந்தருக்கும் (onlyrajini.com) கும் அனுப்பப்பட்டுள்ளது , நீங்கள் விரும்பினால் தமிழில் தட்டச்சு செய்யப்பட்ட வகுப்புகள் பற்றிய விவரங்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் , உங்கள் வலைத்தளத்தில் இந்தபதிவு இடம் பெற்றால் நம் ரசிகர்களில் சிலருக்கும் தியான அனுபவம் கிடைக்க ஒரு வழி கிடைக்கும் .

Admin,India
Wednesday, 26th November 2008 at 16:02:59

வணக்கம் திரு.பாலச்சந்திரன். உங்களையும் தான் காணவில்லை பல வருடங்களாக.. மிகவும் நன்றி வருகை புரிந்தமைக்கு... உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் இந்த சமையத்தில். Please start active blogging in muthamil :)

-Nattu.

Baijubalakrishnan,Coimbatore
Wednesday, 26th November 2008 at 13:15:23

தலைவரின் தகுந்த பதில் அனைத்தும்,தலைவரை நேசிப்போருக்கு விருந்தாகவும்,விமர்சிபோருக்கு வியாதியை போக்கும் ம‌ருந்தாக‌வும் இருக்கும் என்ப‌தில்
ச‌ந்தேக‌மெ இல்லை....

வாழ்க‌ த‌லைவ‌ர்....

இப்ப‌டிக்கு,
பைஜூ.பா

Nanda,USA
Wednesday, 26th November 2008 at 12:45:10

Superb!!!
Balachandran,America
Wednesday, 26th November 2008 at 12:32:25

எங்கே போயிருந்திங்க ராம்கி, இத்தனை நாள்.
கலக்குறீங்க. இன்னும் நல்லா கலக்குங்கோ.
அன்புடன்,
பாலச்சந்திரன்.
www.muthamil.com

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information