Other Articles
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
அந்த நாள் இனிய நாள் - 1
எம்.என்.நம்பியாருக்கு நàÂ
ஒருவன் ஒருவன் முதலாளி பà
ஈழத் தமிழர் பிரச்சினை: வà¯
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் à
சென்னையில் ரத்ததான முகàÂ
‘Sultan’ worldwide release on April 14th!
Exclusive: சத்யநாராயணா விளக்கம்!
சத்திக்கு தற்காலிக ஓயà¯Â
எந்திரன்: கழிந்தது முதலà¯

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
சென்னையில் எந்திரன்!
(Tuesday, 25th November 2008)
நவம்பர் 24. தி.நகரின் பிஸியான தெருவான வடக்கு உஸ்மான் சாலை வழக்கமான மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகத்தான் இருந்தது. நேரம் சரியாக இரவு எட்டரை மணி.  உஸ்மான் சாலையில் அந்த புரோமோட்டர் கட்டிடத்திற்கு முன்னால் நான்கு வேன்கள் வந்து நின்றன. கூடவே ஒரு கேரவேனும்.  கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அனைத்தும் தயாராக இருந்தன.  எந்திரன் ஷீட்டிங்.

வேனிலிருந்து இறங்கிய டைரக்டர் ஷங்கர் வேகவேகமாக இரண்டாவது மாடிக்கு வந்ததும் எந்திரன் டீம் அலெர்ட்டானது.

உதவியாளர்களிட்ம் காட்சியை ஷங்கர் விளக்க ஆரம்பித்தார்.  காமிராமேன் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளுக்கு வெளிச்சம் போதாது என்று லைட்மேன்களிட்ம் சொல்லிக்கொண்டிருந்தார். நிமிஷங்கள் கரைந்து மணி ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக பதினொன்றரை மணி.  ஷாட் ரெடி என்ற குரல் வந்ததும், கேரவேனின் கதவுகள் திறந்தன. மின்னலென வெளியே வந்தது சூப்பர் ஸ்டார்!

அதே வேகத்துடன் இரண்டாவது மாடிக்கு சென்று செட்டில் ஆஜரானார். பழுப்பு நிற கோட், உள்ளே நீல நிறத்தில் கழுத்தில்லாத பனியன், காட்டன் பேண்ட் என்று சிவாஜியை ஞாபகப்படுத்தினார் இந்த எந்திரன்.

ரஜினியை வைத்து இயக்கியவர்களில் ஷங்கருக்கு நிறைய சிறப்பு உண்டு.  அதில் முக்கியமானது சென்னையிலேயே மக்கள் புழங்கும் பரபரப்பான இடங்களில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வது.

எந்தவொரு இயக்குநரும் நினைத்துகூட பார்க்காதது.  சென்னை வேப்பேரியிலும், திருப்போருரிலும் சிவாஜி படப்பிடிப்பை நடத்திக்காட்டியவர்தான். எந்திரனில் இன்னும் ஒரு படி மேலே போய் தி.நகரிலேயே ஷீட்டிங்!

காட்சிப்படி எந்திரன் தனது காதலிக்காக விலை உயர்ந்த நகைகள் வாங்குவதாகவும் அது சம்பந்தமாக உதவியாளர் ஏதோ கேட்க, அதை மறுத்து எந்திரன் வசனம் பேசவேண்டும். 

இரண்டு மிட் ஷாட், ஒரு குளோஸப் ஷாட் என்று பிளான் செய்திருந்தார்கள்.  காட்சிக்காக அந்த இரண்டாவது மாடியே நகைக்கடையாக மாறியிருந்தது.

கடைக்காரரில் நகைகள் பற்றி ரஜினி கேட்கும் காட்சி எட்டு ஷாட்டுகளுக்கு பிறகு ஓகே ஆனது.  முதல் மூன்று ஷாட்டுகளில் ஷங்கருக்கு திருப்தியே வரவில்லை. எழுந்து போய் ரஜினியிடம் ஏதோ ரகசியமாக பேசிவிட்டு வந்தார்.  அடுத்தடுத்த ஷாட்டுகள் ஷங்கருக்கு திருப்தியை த்ந்தன.

மணிரத்னம் படம் போல் நறுக்கான நான்கு வரி வசனங்கள்தான். ஏன் இந்த வீண் செலவென்று உதவியாளர் கேட்க, காதலிக்காக எதைவேண்டுமானாலும் செய்வேனென்று எந்திரன் பதில் சொல்வது போல காட்சி.

மொத்தம் ஐந்து ஷாட்டுகள். நான்கு மணி நேரம் தொட்ர்ந்து படப்பிடிப்பு.  எந்திரன் டீம் பேக் அப் ஆகும்போது விடியற்காலை மணி நான்கு.

இன்று சென்னையில் மதியம் முதலே நல்ல மழை. மவுண்ட் ரோடில் கூட தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. இன்னும் விடாமல் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தி.நகர் உஸ்மான் சாலையிலிருக்கும் அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடி இன்றும் ஷீட்டிங் விளக்குகளால் பளிச்சென்று இருக்கிறது.  நீங்கள் இதைப்படிக்கும் இந்த விநாடியில் சூப்பர் ஸ்டார் காமிராவுக்கு முன்னால் நின்று ஷங்கரின் ஆக்ஷன் குரலுக்கு ரீயாக்ஷன் காட்டிக்கொண்டிருப்பார்.

Previous

Next
 
   
14 Comment(s)Views: 5489

jayaprakash,india/trichy
Tuesday, 30th December 2008 at 04:17:11

தலைவர் வந்தால் மயானமும் மன்னன் கோட்டையாகிவிடும் என்பது படைத்தவனுக்கே தெரியும்..பின் நாமெல்லாம் எம்மாத்திரம்
Very good coverage.Waiting for more news


jayaprakash,india/trichy
Tuesday, 30th December 2008 at 04:15:26

I am super star fan.
senthil,india
Wednesday, 3rd December 2008 at 01:49:53

Nadamadum kadavool , yengal daivam , nee yendri oor aanuvum asaiyathu , thalaiiiiiiiiva
SL Boy,Sri Lanka
Thursday, 27th November 2008 at 08:11:45

please translate into english............
keshva,indi
Thursday, 27th November 2008 at 03:57:46

pls be convert to english
charles,madurai
Wednesday, 26th November 2008 at 21:14:14

please dont put any shoot taken in film ....then what differnce between other media and fans club like us....just inform the shooting place ...please dnt explain
Arooran,London
Wednesday, 26th November 2008 at 12:58:39

Translate in English plz!
BABA APS,chennai
Wednesday, 26th November 2008 at 08:10:26

due to rain there was no sun , but there was sunlight due to pressence of SUPERSTAR
napoleon,India Bangalore
Wednesday, 26th November 2008 at 01:47:00

Very good coverage.Waiting for more news.
boopathi,India
Tuesday, 25th November 2008 at 22:15:37

eagarly waiting to see
veer,sudan
Tuesday, 25th November 2008 at 18:40:46

cool
Baijubalakrishnan,Coimbatore
Tuesday, 25th November 2008 at 16:12:58

தலைவர் வந்தால் மயானமும் மன்னன் கோட்டையாகிவிடும் என்பது படைத்தவனுக்கே தெரியும்..பின் நாமெல்லாம் எம்மாத்திரம் !!!!!!!

பைஜூ.பா
கோவை.

aun,india/kumbakonam
Tuesday, 25th November 2008 at 14:38:39

hype now been created alot,because of this print itself,waiting thalaiva.
Rasigar En 7,USA
Tuesday, 25th November 2008 at 14:16:32

sooper!!

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information