Other Articles
No Rajini Birthday Celebration in 2008
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
‘Sultan’ worldwide release on April 14th!
Sathyanarayana rested from Rajini fan club!
சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
எந்திரன்: கழிந்தது முதல் திருஷ்டி!
ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்
Thaai Veedu was a pakka commercial movie
ரஜினிகாந்த், ஒரு உன்னத மனிதர் - ஐஸ்வர்யாராய்
Rajinikanth proved he is lord and master of Kollywood
Why should he wait for the call of God when he gets such a response here?
Rajini is a Phenomenon! – Kamal Hassan
ரஜினியின் இன்றைய இமேஜ்... சில பார்வைகள்!
Rajini may spring a surprise to Tamils - Shatru
Dharmadurai was a clean winner in 1991 Pongal releases
ஆஹா... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?
In his recent interview to CNN IBN Channel, the Telugu superstar..
வீரன் போற்றப்படத்தான் வேண்டுமேயொழிய தூற்றப்படக்கூடாது!
ரஜினியின் நேர்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த வெற்றி!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
(Tuesday, 18th November 2008)

ஜினிக்கு பாட்டு எழுதும்போது மட்டும் யாரும் சொல்லாமலே தானாக வந்து விழுகின்றன வார்த்தைகள். அதுதான் அவருக்குள்ள வசீகரம், சிறப்பு என்கிறார் கவிஞர் வைரமுத்து.

சென்னையில் லஷ்மன் ஸ்ருதியின் வித்தியாசமான இசை நிகழ்ச்சி ஒன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அந்தப் பாடல் பிறந்த விதம் போன்ற சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் சிலவற்றை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோர் பாடி பரவசப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாடலையும் அவர்கள் பாடுவதற்கு முன்பாக, அந்த பாடல்களை எழுதிய சூழ்நிலையை கவிஞர் வைரமுத்து விவரிக்க, அதுவே ஒரு தனி அனுபவமாக அமைந்தது ரசிகர்களுக்கு.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம் பற்றி அவர் விளக்கியபோது, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.
அவர் பேசியதிலிருந்து...

ரஜினி அவர்கள் நடித்த முத்து படத்துக்கு பாடல் எழுதுவதற்காக ரஜினிகாந்த், நான், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கேரளாவில் உள்ள கொச்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, ஏ.ஆர்.ரகுமான் ஒரு தனி அறைக்கு சென்றுவிட்டார். நான் பாடலுக்கு மெட்டு போடும் வரை என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி அறைக் கதவையும் அடைத்துக் கொண்டார்.

ரஜினிகாந்தும், நானும் ஆன்மீகம், அரசியல் என்று எவ்வளவோ பேசினோம். அப்போது, மாவீரன் அலெக்சாண்டர் பற்றி ஒரு சம்பவத்தைச் சொன்னார் ரஜினி அவர்கள்.
உலகில் உள்ள அனைத்து நாடுகள் மீதும் போரிட்டு வென்ற அலெக்சாண்டரே, தான் இறக்கும்போது தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து, இவன் போகும்போது ஒன்றையும் கொண்டு போகவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தனது உதவியாளரிடம் கூறினாராம்.

இதை நண்பர் ரஜினி அவர்கள் சொன்னபோது, கேட்டு வைத்துக் கொண்டேன்.
அதை வைத்தே, ‘முத்து’ படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை எழுதினேன். அந்த பாடலின் இடையே ‘மண்ணின் மீது மனிதனுக்காசை, மனிதன் மீது மண்ணுக்காசை..’ என்று எழுதியது இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடத்தான்.

ரஜினிகாந்தின் சிறப்பே, யாரையும் அவர் நேரடியாக கட்டுப்படுத்துவதில்லை. நம்மையும் அறியாமல் அவர் சொல்வதைக் கேட்போம். அவரது வார்த்தக்கு அப்படி ஒரு வசீகரம் இருக்கிறது. எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும், இந்த மாதிரிதான் வரிகள் அமையணும் என்று அவர் யாருக்கும் கட்டளை போட்டதில்லை. அவருக்கு எழுதும்போது தானாகவே வந்து விழுகின்றன அத்தகைய வரிகள். அதுதான் அந்த உச்ச நட்சத்திரத்தின் சிறப்பு, என்றார் வைரமுத்து.

-சங்கநாதன்


Previous

Next
 
   
7 Comment(s)Views: 4951

sathish kumar.d,dubai
Friday, 12th December 2008 at 05:13:27

தலைவர் சொன்னார் என்ரால் எதிலும் அர்த்தம் இருக்கும், உலகத்தில் நடக்கிரத கரக்கிட்டா சொல்ராரு,அதனால தான் பாட்டு வரிகல் எல்லாம் ரஜினி சார்க்கு ஏத்த மாதிரி அமைகின்ரது........அதுதான்.........சூப்பர்.....க்ஷ்டார்...........பிரந்த நால் வாழ்த்துக்கல்..........
Rajesh Padmanabhan,Dubai
Saturday, 22nd November 2008 at 08:45:39

Very Intersting Message from Thir.Vairamuthu
SL Boy,Sri Lanka
Wednesday, 19th November 2008 at 07:57:42

please translate into ENGLISH....
Saravanan,trichy
Wednesday, 19th November 2008 at 03:58:46

one sad news... M.N.Nambiar had passed away...
R.Gopi,UAE / Dubai
Wednesday, 19th November 2008 at 01:02:43

வைரமுத்து ரஜினிக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்... இந்த ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் அதற்கு ஒரு சான்று.

சிவாஜி 175 நாள் விழாவில் பேசும்போது கூட ரஜினியை பற்றி கூறும்போது ... அவரால் என் பாடல்கள் A, B

boopathi,India
Wednesday, 19th November 2008 at 00:52:13

One and Only OUR SUPER STAR has that power and only he deserves such great potential.
sivakumar,DUBAI, UAE
Wednesday, 19th November 2008 at 00:26:03

I am really pround of being a strong RAJINI fan.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information