Other Articles
In his recent interview to CNN IBN Channel, the Telugu superstar..
வீரன் போற்றப்படத்தான் வேண்டுமேயொழிய தூற்றப்படக்கூடாது!
ரஜினியின் நேர்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த வெற்றி!
பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!
தலைவரின் தடபுடலான பேட்டியும், தாய்மார்களின் மகிழ்ச்சியும்...
Video clip of Superstar's speech at fans meeting
If God proposes We can Start Party- The blossoming Rajini
மாவீரனாய் நுழைந்தார்; மகுடத்தோடு திரும்பினார்!
தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா?
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
அது ஒரு பாண்டியன்’காலம்!
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ஆஹா... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?
(Saturday, 8th November 2008)

கடமையைச் செய்; பலனை எதிர்பார்! – இப்படி ரஜினி சொன்னது தவறு எனக் கூறிக்கொண்டு சில வெத்து வேட்டுப் பேர்வழிகள் இலவச விளம்பரத்துக்கு கால் பிறாண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்...

இப்போதெல்லாம் ரஜினி என்ன பேசினாலும் அதற்கு ஒரு தப்பர்த்தம் கண்டுபிடித்து போராட்டம் நடத்துவதற்கென்றே ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது,
அவர் எப்போதடா வாய் திறப்பார்... ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று எதையாவது சொல்லி இலவச பப்ளிசிட்டி தேடலாம் என சின்ன மனிதர்கள் தொடங்கி, பெரிய மனிதர்கள் போர்வையில் உலாவரும் சின்ன புத்திக்காரர்கள் வரை காத்துக் கிடக்கிறார்கள்.

ரஜினி அடுத்து பேசுவதற்கு எப்படியும் இன்னும் சில நாட்கள் ஆகும். காரணம் எந்திரன் ஷூட்டிங் பிஸி.. அதுவரைக்கு இவர்களால் சும்மா இருக்க முடியாதே...

என்ன பண்ணலாம்? ஆங்... அவரோட பழைய பட பஞ்ச் டயலாக்குகள் - சீன்களை எடுத்துச் சொல்லி சீன் போடலாமே... பொழப்பு ஓடணுமே பொதுமக்களே...!
சும்மா... சில சாம்பிள் பாக்கறீங்களா...

சிவாஜி: சும்மா அதிருதுல்ல...

- ஜியாலஜிஸ்டுகள் எனப்படும் மண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் அல்லது நில நடுக்க ஆராய்ச்சியாளர்கள் இனி ரஜினியுடன் மல்லுக்கட்ட ஆரம்பிக்கலாம், அதிருவதைக் கண்டுபிடிச்சு சொல்ல நாங்க இருக்கும்போது இவரு எப்படி அதைச் சொல்லலாம்னு!

சந்திரமுகி: யாமிருக்க பயமேன்; சரவணனிருக்க பயமேன்...

- இதுக்காக வேற யார் தகராறு பண்ணப் போறாங்க... அந்தப் பழனியாண்டவன் பக்தர்கள்தான். இந்த டயலாக்கை இனி ரஜினி தவிர்த்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று தடை விதிக்கக் கோரி அவர்களும் கிளம்பலாம்...

பாபா: நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...

-நேரத்தின் மதிப்பு தெரியாமல், மாணவர்கள் லேட்டா வருவதை நியாயப்படுத்த முயல்கிறார் ரஜினி, என்று பள்ளி நிர்வாகிகள் வேண்டுமானால் கொளுத்திப் போட்டுப் பார்க்கலாமே!

படையப்பா: என் வழி, தனி வழி....

- ‘ஆஹா... தனி வழியா... அதை எப்படி அனுமதிக்க முடியும். அப்புறம் நாங்க எதுக்கு நெடுச்சாலை, ரயில்வே, விமான வழி, கடல் வழி எல்லாம் வச்சிருக்கோம். அதெல்லாம் முடியாது... ரஜினி இந்த மூணு வழிகளைத்தான் யூஸ் பண்ணனும், தனி வழிக்கு அனுமதிக்க மாட்டோம்’னு நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, விமானப் பணியாளர்கள் பெயரில் கொஞ்சம் பேர் கிளம்பி விடலாமே!!

பாபா: அசந்தா அடிக்கிறது உங்க பாலிஸி; அசராம அடிக்கிறது இந்த பாபா பாலிஸி!

-ரஜினி வன்முறையைத் தூண்டுகிறார், அசராம நிறைய பேரை அடிச்சி ஊனமாக்கிட்டார்னு கூட சில சங்கங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்...

அருணாச்சம்: ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்!

-அப்ப... நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம். ஆண்டவன்கிட்ட இவர் நேரடியா காண்டாக்ட் வச்சிக்கிட்டு எங்க பொழப்பைக் கெடுக்கிறார்னு பூசாரிகள், அர்ச்சகர்கள் கொடி பிடிக்கலாம்!!

பாட்ஷா: நான் ஒரு தடவ சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி!

-நாட்டில் உள்ள கணக்கு வல்லுநர்கள் எல்லாம் கூட்டுப் போராட்டம் அறிவிக்கலாம்... ‘அது எப்படி ரஜினி ஒரு முறை சொன்னா நூறுமுறையாகும்... இது தப்புக் கணக்கு.. நாங்க ஒத்துக்கமாட்டோம். போராட்டம்... போராட்டம்... ரஜினி மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம்...’

அய்யோ... தாங்க முடியலடா சாமி... நாட்ல இந்த சங்கங்களோட தொல்ல நிஜமாவே தாங்க முடியலடா சாமி! 'நாராயணா'... இந்த கொசுக்கள ஒழிக்க ஒரு வழி சொல்லேம்பா...!!

-சங்கநாதன்

 






 
23 Comment(s)Views: 9179

12Next Page
Next
Tamil,India/Chennai
Saturday, 15th November 2008 at 09:50:39

Ithu Namaku thevai illathathu. waste of time.
evalovo vishayam iruku athavittutu. Enna boss

SATHISH,INDIA
Tuesday, 11th November 2008 at 04:42:04

ROBO
SL Boy,Sri Lanka
Tuesday, 11th November 2008 at 00:11:27

please translate into english ....
.......................
...............
please
please
please
.......

rajesh v,chennai
Monday, 10th November 2008 at 14:53:01

அருமை ,,,,மிகவும் அருமை.




S.Nagesh,Madurai
Monday, 10th November 2008 at 08:47:41

Dinamalm(r) again started the controversey. My humble request to Rajini fans to ignore these malam newspapers. Read Hindu daily. In tamil, read Dinamani. In the magazine, read Thuglaq. Cho is the only person, who understands the mind of our Thalaivar
M. Ashik Mohideen,Dubai
Monday, 10th November 2008 at 00:56:13

சங்கநாதான், எந்திரனில் யார் வேண்டுமாணலும் காமெடி ரோலில் நடிக்கட்டும். நீங்க காமெடி டிராக் எழுதலாமே!!! வயிறு குழுங்க வைத்த உங்கள் எழுத்துக்களுக்கு எங்கள் நன்ற்'.

வாழ்த்துக்கள்

Sankar,India
Monday, 10th November 2008 at 00:14:49

Super ji. Really all your articles are very good. This articles also good and very humors.
yuvaraj,India/Puducherry
Monday, 10th November 2008 at 00:13:24

அய்யோ... தாங்க முடியலடா சாமி... நாட்ல இந்த சங்கங்களோட தொல்ல நிஜமாவே தாங்க முடியலடா சாமி! 'நாராயணா'... இந்த கொசுக்கள ஒழிக்க ஒரு வழி சொல்லேம்பா...!!
அறுமையான பதிவு நன்பா.

imran,india/tirunelveli
Sunday, 9th November 2008 at 18:14:29

helllo sanganathan brother..... தலைவருக்கு அப்பரம் நான் உங்க ரசிகன் தான்.... ur articles, wordings that u use in those articles, way of coating..... all r excellent... seri, THALAIVAR oda rasigan la... apadi thaan irukkum!!
praburam,india
Sunday, 9th November 2008 at 18:03:45

Very excellent. We can publish this in all tamil news papers.
thambidurai,mumbai
Sunday, 9th November 2008 at 13:05:37

SUPER COMMENTS.All you have written are true
Manoharan,Tirupur
Sunday, 9th November 2008 at 12:17:24

This is the best way to reply those jobless people. We should not take these people seriously,becoz they are expecting that only. Instead these kind of Kinndal replies will make themselves look fools. Keep going. Asaraama adinga...
bharathapriyan,
Sunday, 9th November 2008 at 11:28:51

This is what i expect a correct positive attitude well done!!!fans!!
கிரி,Singapore
Sunday, 9th November 2008 at 11:14:29

சங்கநாதன் சொல்ல முடியாதுங்க..நீங்க சொன்ன எதிலையாவது பிடித்து ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவாங்க :-))


Selva,USA
Sunday, 9th November 2008 at 10:08:37

We don't worry whoever is simpling yelling Our Thalaivar...mainly we have to avoid reading "POI" malar, since they are trying to create unnecessary problem against our Thalaivar..

At that sametime, the above article can be pulished by the "POI" malar..the title is fantastic..


"ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

Vijay,USA Burlington
Sunday, 9th November 2008 at 08:54:37

Hilarious... I could'nt stop laughing... :)
chakra,Mumbai
Sunday, 9th November 2008 at 08:18:18

மிகவும் சரியான பதிவு. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது
naveen,USA
Sunday, 9th November 2008 at 07:51:47

Rajini is the only celebrity, who follows hinduism very openly and goes to himalayas. There are many celebrities like Karunanidhi, Kamal, sathyaraj etc... talk bad about Hinduism. These hindu organisation has no "Dhillu" or we can say "common sense" to oppose others.
basaki,
Sunday, 9th November 2008 at 07:00:34

Sanganthan sir,

I never expected such a hilarious post from you. ROFTL.

-Sakthi

Rajini- Legend's fan,
Sunday, 9th November 2008 at 06:33:36

அதே தெருமலர் இன்னைக்கி மறுபடியும் ரஜினி ரசிகர் பத்து தீபாவாளி கொண்டாடிய சந்தோஷத்திலன்னு ஒரு ஒப்புக்கு சப்பாணி செய்தி, இந்த பேப்பர வாங்கி கொளுத்துங்கப்பா! அப்பவாது நம்ம ஆத்திரம் கொஞ்சம் அடங்குதான்னு பாப்போம்.
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information