Other Articles
பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!
தலைவரின் தடபுடலான பேட்டியும், தாய்மார்களின் மகிழ்ச்சியும்...
Video clip of Superstar's speech at fans meeting
If God proposes We can Start Party- The blossoming Rajini
மாவீரனாய் நுழைந்தார்; மகுடத்தோடு திரும்பினார்!
தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா?
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
அது ஒரு பாண்டியன்’காலம்!
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
I can see only one actor to play Balram: Rajnikanth!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினியின் நேர்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த வெற்றி!
(Thursday, 6th November 2008)

கூட்டம் முடிந்து ரஜினி கிளம்பிவிட்டார்... ஆனாலும் ரசிகர்கள் அந்த அரங்கை விட்டுப் போகவே மனமின்றி அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தனர். அப்போது சில ரசிகர்கள் மேடைக்கு வந்து ரஜினி உட்கார்ந்திருந்த நாற்காலிக்கருகில் நின்று படம் பிடித்துக் கொண்டனர்.

“தலைவருடன்தான் போட்டோ எடுக்க முடியல... அட்லீஸ்ட் தலைவர் உட்கார்ந்த நாற்காலியுடனாவது ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறோம்’ என பெருமிதத்துடன் கூறினர். ரஜினி என்ற மனிதர் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இதைவிட வேறு காரணங்கள் வேண்டுமா?

-ரஜினியின் பெருமையை இப்படி நெத்தியடியாய் சொன்னது ரஜினிக்காக இயங்கும் வலைதளங்களோ... பத்திரிகைகளோ அல்ல. இந்தியாவின் முன்னணி நாளிதழ் தி ஹிந்து!

தலைவரைத் திட்டுபவர்களைப் பற்றி மட்டும்தான் எழுதுகிறீர்களே... பாராட்டுபவர்களை கண்டுக்காம விட்டுடறீங்களே... என்று சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
நியாயமான வருத்தம்தான். அவர்களுக்கான பதில்தான் இந்த முதல் பாரா!
ரஜினி – ரசிகர் சந்திப்புக்குப் பின், மீடியாவுக்குள்ளேயே ரஜினி மீதான பார்வை வெகுவாக மாறியிருப்பதை உணர முடிகிறது.

எப்போதும் ரஜினியை எள்ளி நகையாடுவதையே அறிவு ஜீவித்தனமாகக் கருதிக் கொண்டிருக்கும் தினமணி, ரஜினி பேச்சு குறித்து செய்தி வெளியிட்ட விதமே அதற்குச் சான்று. அவரது பதிலில் இருந்த நேர்மையை செய்தியிலும் தொனிக்கும்படி செய்திருந்தனர்.

ஆனால் அந்தப் பத்திரிகையின் முட்டாள் கார்ட்டூனிஸ்ட் ஒருவர், ரஜினியைப் பற்றி போட்டிருந்த ஒரு அபத்தமான கார்ட்டூனுக்கு தினமணியின் நேர்மை பலியாகிவிட்டதுதான் சோகம். இந்த மாதிரி ஆசாமிகள் இருக்கும் வரை எந்தப் பத்திரிகையும் விளங்காது. ஏற்கெனவே கதிரவன் என்ற அருமையான நாளிதழில் ரஜினி பற்றிய அபத்தமான கார்ட்டூன்களைத் தொடர்ந்து வெளிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியேறி, இப்போது தினமணியில் குப்பைக் கொட்டும் அந்த மதிகெட்ட நபர்தான் இந்த அற்பத்தனமாக கருத்துப் படத்துக்குச் சொந்தக்காரர்.பெயரில் இருக்கும் மதியை, இந்த நபரின் மண்டைக்குள் வைக்காமல் விட்ட ஆண்டவனை நொந்து கொள்வதா... அல்லது இப்படிப்பட்ட ஜென்மங்களை இன்னும் விட்டுவைத்துக் கொண்டிருக்கும் அந்த வடநாட்டு நிர்வாகத்தை நோவதா தெரியவில்லை.

தன் நிலையை, மனதை இத்தனை தெளிவாக எந்த வித ஈகோவும் இல்லாமல் தன் ரசிகர்களிடம் திறந்து காட்டிய ஒரு நேர்மையான மனிதரை இன்னமும் விமர்சித்துக் கொண்டிருக்கும் இவர்களை நிச்சயம் காலம் மன்னிக்காது.

(இதுக்குதான்... இதுக்குதான் மீடியா பத்தி கொஞ்ச காலம் எழுதக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். என்னதான் இவர்களைப் பற்றி நல்லவிதமாக எழுத முயற்சித்தாலும் இவர்கள் செய்திருக்கும் தீமைகள்தான் கண்முன்னே வந்து விழுகின்றன. சரி.... தலைவர் மாதிரி... முன்னாலே முன்னாலே போக முயற்சிப்பாம்...!)

நாளிதழ்களில் ரஜினியின் ரசிகர் மன்ற சந்திப்பை அருமையாகப் பதிவு செய்தவை தினத்தந்தியும், தினகரனும்.

அதிலும் தினந்தத்தி, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியைக் கூட ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு, ரஜினியின் பேச்சை எட்டுகால தலைப்புச் செய்தியாக்கியது அன்றைக்கு.

குசேலன் விவகாரம் குறித்த ரஜினியின் பதிலை சன் டிவி இருட்டிப்பு செய்தாலும், அதை தெளிவாக வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொண்டது தினகரன்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் தி ஹிந்துவும், டெக்கான் கிரானிக்கிளும் நிகழ்வை தெளிவாக படம் பிடித்திருந்தன. குறிப்பாக தி ஹிந்து, செய்தியை வெளியிட்ட நேர்மையிலும் அதை வெளிக்காட்டிய விதத்திலும் மீண்டும் தன் தரத்தைக் காட்டியிருந்தது (அதன் ஒரு சாம்பிள்தான் மேலே படித்தது).

தனக்குப் படியளந்த ‘ரஜினி ரசிகனை’ தொடர்ந்து நடத்த முடியாத சோகத்துக்கு ஆளானதிலிருந்தே, ரஜினியைப் பற்றி தாறுமாறாக எழுதி வந்த நக்கீரன் கூட, இந்த ரசிகர் மன்ற சந்திப்பைப் பற்றி நேர்மையாக கருத்து வெளியிட்டிருந்தது. ஆனால் போயும் போயும் விஜய்காந்த் நடத்திய ‘குடிகார மாநாட்டு’டன் இந்த சந்திப்பை ஒப்பிட்டு எழுதியதுதான் நமக்குப் பிடிக்கவில்லை.

தொலைக்காட்சிகளும், இணையதளங்களும் எந்த அளவு ரஜினியின் இந்த சந்திப்புக்கு முக்கியத்துவம் தந்தன என்பதை எல்லோருமே அறிவீர்கள். தனி வலைப் பதிவர்கள் எனும் பெயரில் ரஜினி மற்றும் அவரது ரசிகர்களுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு வக்கிரமாக எழுதுபவர்களும் கூட வேறு வழியின்றி அவரைப் பாராட்டி எழுதிய பதிவுகளை நிறையப் பார்க்க முடிந்தது.

அது ரஜினியின் நேர்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த வெற்றி!

குறிப்பு: ஒரேயடியாக மீடியாவை பாராட்டவும் முடியவில்லை நம்மால். காரணம் இருக்கிறது. அடுத்து வரும் பதிவைப் படியுங்கள். இவர்களின் தில்லுமுல்லு புரியும்.

-சங்கநாதன்


 
8 Comment(s)Views: 4907

Kripa Saravanan,India
Friday, 7th November 2008 at 20:48:44

எதிரியையும் பாராட்ட வைக்கும் காந்தம், இதை படியுங்கள்,

ரஜினியை பாராட்டுகிறேன்-ராமதாஸ் சிறப்புப் பேட்டி [நன்றி: தட்ஸ்தமிழ்.காம் ‍ http://thatstamil.oneindia.in/news/2008/11/07/tn-exclusive-dr-ramadass-praises-rajinikanth.html]:

அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை.

ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்...

இந்தக் கேள்வியை டாக்டர் ராமதாசிடமே கேட்டோம். தட்ஸ்தமிழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் அதற்கான பதிலைத் தெரிவித்தார் ராமதாஸ்.

பேட்டி விவரம்:

ரஜினிக்கு உங்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த திடீர் பாராட்டின் பின்னணி என்ன?

இதிலென்ன பெரிய பின்னணி இருக்கிறது... யாரையும் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் அரசியலை நான் ஒருபோதும் நடத்தியவனில்லை. நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுபவன் இந்த ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ரஜினி வரமாட்டார் என்றெல்லாம் பலர் சொல்லிக் கொண்டிருந்தபோது பொறுப்புடன் உண்ணாவிரதம் முடியும் வரை இருந்து, மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்திருந்த ரஜினியைப் பாராட்டியதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு தமிழன் என்ற முறையில், தமிழர்களுக்கு ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதை ஏற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். எனக்கு உண்மையிலேயே ரஜினியின் பேச்சு ஆச்சரியத்தையும், பிரச்சினையை அவர் சரியாகப் புரிந்து கொண்டு பேசியது மகிழ்ச்சியையும் அளித்தது.

போர்க் களத்தில் துன்புற்று அடிபட்டுக் கிடக்கும் தமிழர்கள் அனைவருக்கும் ஒத்தடம் கொடுப்பது போலிருந்த அவரது பேச்சை நான் மட்டுமல்ல, தமிழுணர்வாளர்கள் அனைவருமே வரவேற்கிறார்கள்.

அதேபோல பாமகவின் வேண்டுகோளுக்கிணங்கி திரைப்படங்களில் புகைப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளையே நீக்கியிருக்கிறார். இன்றைக்கு உள்ள சின்ன நடிகர்கள் கூட, நீ சொல்லி நாங்க என்ன திருந்தறது என்று கேட்கும் நேரத்தில், இவர் எங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் திரைப்படத்தில் அத்தகைய காட்சிகளை வைக்காமல் தவிர்ப்பதாக வெளிப்படையாகக் கூறியது பாமகவின் வெற்றிதானே... நாம் சொன்னதை அவர் மதித்து நடந்து கொண்டார். அதற்கும் திட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா...

ரஜினிக்குள்ள தைரியம் கருணாநிதிக்குக் கூட இல்லை என்று கூறியிருக்கிறீர்களே...?

நான் எதையும் மறைத்துப் பேசவில்லையே... உண்மையில் அன்று ரஜினியின் பேச்சில் இருந்த துணிச்சலும் தெளிவும் ஒரு மாநில முதல்வரான கருணாநிதிக்குக் கூட இல்லை (குறிப்பு: இந்தப் பேட்டி அவர் இரு தினங்களுக்கு முன்பு அளித்தது). இதை இப்போதும் நான் மறுக்கவில்லை. இலங்கை அரசு தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறிய விதம் தமிழர்களின் வெற்றியை பிரபலப்படுத்தியிருக்கிறது. இதைக்கூட இங்குள்ள ஆட்சியாளர்கள் சொல்ல பயப்படுகிறார்களே... சிஙà

k.sudarsan,madurai
Friday, 7th November 2008 at 05:10:06

sanganathan my kind advise to our fans including you also don't belive any daily,weekly,monthly magazines and the media also.now a days the reguler character of our newspaper's and media is to watching the femiliar face who were talking against our thalaivar and publised as aheadline wallpaper.earlier times i'm also in the search of papers to see what there opinion about our thalaivar.but now i realised that they are not our wellwishers.they are cheaters.
boopathi,India
Friday, 7th November 2008 at 04:35:27

I stopped reading all the magazines long back, its really disgusting to read such idiotic magazine like JV, AV, and Some Reportr, kungm its all become crap now. Just to sell their mag. they are ready to do anything, so we decided not to read
T.JAWAHAR,TIRUPUR , INDIA
Friday, 7th November 2008 at 00:08:59

எந்த பத்திரிக்கையையும் நம்ப வேண்டாம். நமது கோபத்தை தனிக்க நாடகம் ஆடுகிறார்கள். எல்லாமே திருடர்கள்தான். நம் இனையதளத்தில் எந்த பத்திரிக்கையையும் வாங்க வேண்டாம் என்றூ கூறீயதில் இருந்து நான் இதுவரை எந்த பத்திரிக்கையையும் வாங்குவதில்லை. (எவ்வளவு புக் படிப்பேன் என்ரு நண்பர் " நட்டு"வுக்கு தெரியும்.)

அன்புடன்
த‌.ஜவஹர்

T.subramaniam,Coimbatore
Thursday, 6th November 2008 at 22:16:16

What ever may be the media release..they are professionals and begging for money from us simply beggars..but you know yday i went to big shopping complex where mostly middle class people will visit even other states peoples every body while eating,while picking grocery,while purchasing dress they were talking simply about thalaivar ..but after these i went to vegetable market u know about the peoples of all class...one 80 yr old grand ma told to crowd...its precious to be rajinis footwear...so be proud that v are living with rajini..what a beauty is every body who came in salon cars,bikes,rickshaws every body noded their head.
where god is? It was in TN but now all over the universe!(An Professor'comment)god=truth=rajinikanth this was his explanation further.
with a happy shed of tears in my eyes i finish this.

karthik,
Thursday, 6th November 2008 at 16:01:27

sila nerangalil oru nallavanakku oore ethirthu nilkum aanal avan aandavanal nichayam kai vida pada maatan
raghu,UK
Thursday, 6th November 2008 at 15:19:57

ALL MY FELLOW RAJNI FANS ; A MUST READ ARTICLE PUBLISHED IN CINEMA EXPRESS. A SUL SEARCHING ONE.. WHAT A GREAT HUMAN BEING IS THIS MAN. A WELL WRITTEN ARTICLE..
raj,trichy
Thursday, 6th November 2008 at 11:29:12

Hi,

We came to know how is the true character of Rajini after his interaction with his fans meet.Anyway Rajini already informed in Malaysia

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information