Related Articles
If God proposes we can start party - Rajini speech during fans meet
இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் – ரஜினி ஆவேச பேச்சு
Thappu Thalangal - Rajini and climax left the viewers spell bound
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
அது ஒரு பாண்டியன்’காலம்!
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
தலைவரின் தடபுடலான பேட்டியும், தாய்மார்களின் மகிழ்ச்சியும்...
(Wednesday, 5th November 2008)

நேற்றைக்கு மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் பொது, பல பேரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது.... இரவு 8 மணிக்கு சன் டிவி யில் தலைவர் பேச்சு ஒலிபரப்பு என்று...

 

இந்த அழைப்புக்களில் சில எனது நண்பர்களின் பெற்றோர்களிடம் இருந்து வந்ததுதான் ஆச்சர்யம்...

 

8 மணிக்கு இன்னும் சில மணித்துளிகளே இருந்த நேரத்தில் சடாரென்று என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்தேன்...(அவர் வீட்டிற்கு நான் அடிக்கடி செல்லும் வழக்கமும் அன்னியோநியமும் உண்டு என்பதால் முன் அறிவிப்பு எதுவும் தேவைப்படவில்லை) அந்த நண்பரும் அவரது பெற்றோரும் குணத்தால் மிக சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் வீடு சற்று பொருளாதார ரீதியில் சுமாரான பகுதியில் உள்ளது... உள்ளே நுழைந்ததும். பார்த்தால், ஏற்கனவே சில தாய்மார்கள் 8 மணிக்காக ஆவலோடு உட்கார்ந்து இருந்தார்கள்.

 

நான் சென்ற போது, அந்த வீட்டில் நண்பர் இல்லை, அவர் வேறு ஒரு நண்பர் வீட்டில் நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார்..நான் அவரிடம் வந்திருப்பதாக சொன்ன உடன், அவரும் மற்ற நண்பர்களும் என்னோடு ஆஜர்...

 

சரியாக 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.. அதற்குள் என் வீட்டில் இருந்து அழைப்பு, "ஏய், எங்க இருக்க,  சன் டிவியில ரஜினி பேசுறாரு, வர முடியலைன்னா, பக்கத்தில எங்கயாவது பாரு...."

 

ஒரு சினிமா நடிகரின் ரசிகர் மன்ற நிகழ்ச்சியைப் பாரு என்று எந்த தாயாவது, பெற்றோராவது இது வரை கூறியது உண்டா என்று மனதினுள் வியந்தபடி, "நான் பார்த்துட்டு இருக்கேன், நீங்களும் பாருங்க" என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தேன்..

 

அதன் பிறகு, பெங்களூரில் இருந்து சக பதிவர் அருண்ஜி மற்றும் பல நண்பர்கள், எனக்கு இன்பார்ம் செய்த வண்ணம் இருந்தார்கள்... நானும் நன்றி தெரிவித்து விட்டு, நிகழ்ச்சியில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன்...


சில முக்கியமான கேள்வி பதில் சுவாரசியங்களை மட்டுமே இங்கே பதிகிறேன்...

 

"முதல்ல பெத்தவங்கள நீங்க கவனிங்க, மத்தவங்க உங்களை தானா கவனிப்பாங்க"  இந்த பதிலைக் கேட்டதும் நமது நண்பரின் மூத்த சகோதரி, உணர்ச்சி வசப்பட்டு,  "தம்பிங்களா நல்லா கேட்டுக்குங்க... அவரு சொல்றத கேட்டு நடந்தா ஒவ்வோர் வீடும் சொர்க்கம் மாதிரி இருக்குமே " என்றார்...

 

அடுத்து, "அந்தஸ்து என்பது நீங்க சமுதாயத்துக்கு செய்யற நல்ல விஷயங்கள பார்த்து தானா வரணும் கண்ணா, அத நாம தேடிப் போகக் கூடாது என்று தெளிவாக சொன்ன போதும்,

 

"பணம் ஜனம் ரெண்டும் சேர்ந்தா அங்க அரசியல் வரும், பிரச்சினை வரும்... நான் உங்க பணத்தை எடுக்க மாட்டேன், நீங்க என் பணத்தைக் கேட்காதீங்க... என்னால முடிஞ்ச நல்ல உதவிகளை, என் நேரடி கண்காணிப்பில் நான் செய்றேன்.. நீங்களும் உங்களால் முடிஞ்சத நீங்களே செய்யுங்க" என்ற போதும்,  ஒரு பெரியவர், "சபாஷ்டா, இவ்வளவு தைரியமா, காசை பத்தி பேசுறதுக்கு சரியான தில்லு வேணும் ! , பெரியார் பேசற மாதிரி கட் அண்ட் ரைட்டா பேசுறாரே" என்று வியந்தார்..

 

கிருஷ்ணகிரியில் தாய் தந்தை நினைவிடம் பற்றி அவர் பதில் அளித்த போது,  நான் எனது மூளையை பல்வேறு கோணங்களில் அலை பாய விட்டுக் கொண்டு இருந்த போது, அங்கு இருந்த ஒரு வயதான பெண்மணி, "அப்பா அம்மாவுக்கு கோயில் கட்டணுமாம், மகராசன்" என்று ஒரே வரியில் புரிந்து சொன்ன போது, எனக்கு சம்மட்டியில் அடித்ததுபோல் இருந்தது..

 

கடைசியாக, "நான் நல்ல கணவனாக, தந்தையாக, குடும்பத் தலைவனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையை சரியாக செய்கிறேன், நீங்களும் அது போல் உங்க கடமையை சரியாக செய்யுங்க என்று சொன்ன போது, " கிட்டத்தட்ட எல்லாருமே கண் கலங்கிய நிலையில் ஒரு ஆனந்தத்தில் இருந்ததைக் காண முடிந்தது..

 

நிகழ்ச்சி முடிந்து மகிழ்ச்சியுடன் வரும்போது, மனதில் பல சிந்தனைகள்..இந்த மனிதனின் தொண்டனாக இருக்க, இன்னும் எவ்வளவு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னை என்று உணர்ந்தேன்... எனது கடமைகள் என் கண் முன்னே விஸ்வரூபமாகத் தெரிந்தது.....

 

ரஜினி சொன்னது போல் ஒருவருக்கு பல குரு ராஜர்கள் இருப்பார்கள், எனக்கும் அப்படியே; ரஜினி உட்பட.....

அன்புடன்,
ஈ ரா






 
27 Comment(s)Views: 15332

Previous Page
Previous
12Next Page
Next
Previous Page
Previous
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information