Other Articles
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
(Wednesday, 22nd October 2008)

அன்பு நண்பர்களே,

இன்றைக்கு கர்நாடகத்தையும் சிங்களரையும் எதிர்க்க ஓரணியில் திரள முடியாத பல பேர் ரஜினியை எதிர்ப்பது என்றால் ஒரு கிலோ அல்வாவை தின்ன முடியாமல் தின்னும் சந்தோஷத்துடன் ஒன்றாக மேடை ஏறுவார்கள்...

நமக்கு என்ன செல்வாக்கு இருக்கு, நாம சொல்வதை எத்தனை பேர் கேட்பார்கள் என்ற அடிப்படை விவரம் கூட தெரியாமல் இவர்கள் உளறுவது வழக்கமாகிவிட்டது....

அடிமனதில் ஏற்படும் அளவிட முடியாத பொறாமையும், வயித்தெரிச்சலும்தான் இதற்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...

அவர்களை சொல்லிக் குற்றம் இல்லை, ஒரு பையன் ஒன்றாம் கிளாசில் இருந்து டிகிரி வரை அவனே முதல் ரேங்க் எடுத்துட்டு இருந்து அவனுக்கும் அடுத்தவங்களுக்கும் பல நூறு மார்க் வித்யாசம் இருந்தா எவனுக்குத்தான் வயிறு எரியாது?.... இதுல வேற வாத்தியாருங்களும், நல்ல பசங்களும், ஏன் பக்கத்து ஸ்கூல் வாத்தியாருங்களும் கூட அந்த பையனையே தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா இவனுங்களுக்கு நோவாம என்ன பண்ணும்? அந்த பையன் வேற நல்ல பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து அவங்களையும் பெரிய ஆளா ஆக்கறான்.. படிப்பை விட்டுட்டு போவான்னு பார்த்தா, டிகிரி, பிஎச்டி, ஆராய்ச்சின்னு மேல மேல படிச்சிட்டே இருக்கான்..... இதுங்களுக்கு அவன்கிட்ட போய் கேட்கவோ, அவனை புரிஞ்சிக்கவோ விருப்பம் இல்லை... இதுங்க வீட்ல வேற "அவனும் உங்கள மாதிரி பிள்ளை தானே, நாலு பேர் கிட்ட எப்படி நல்ல பேர் வாங்கறான், நீயும் இருக்கியே மர மண்டை, உதவாக்கரை.." என்று தினமும் திட்டு வேற... அதுங்க என்ன பண்ணும்? மனசு புழுங்கும்..... நல்ல புத்தி இருந்தா அவன்கிட்ட போய் சேரும், இல்லேன்னா, அப்பப்போ ஒளிஞ்சி நின்னு மண்ண வாரி தெளிக்கும். பொய்யான கோள் மூட்டும். அசந்த நேரத்துல கல்ல வீசி அடிக்கும்... இது போன்ற சின்னப் பிள்ளைங்கள என்ன பண்ண முடியும்? ஒழிஞ்சு போய் தொலைன்னு விட வேண்டியதுதான்....

சரி விஷயத்துக்கு வருவோம்...

இப்போ ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்? நாலு பேர் சேந்து ஒரு மைக் செட் கிடைச்சிட்டா, என்ன விஷயமோ அதை விட்டுட்டு பித்துக்குளிதனமா தன்னோட ஆற்றாமையை வெளிப்படுத்தனும்னு நினைக்கிறவங்கள நினைச்சா சிரிக்கவா அழுவவான்னே தெரியலையே?

டி ராஜெந்திரர்னு ஒருத்தர்.... விஷய டி ராஜேந்திரரா இருந்த காலத்துல எல்லாருக்கும் அவரை பிடிச்சது..... இப்போ ரைமிங் வரணும்னு என்னத்தையோ பேசுற அவரை பார்த்தா பாவமா இருக்கு.... இன்னிக்கு, ஈழத் தமிழர் கொல்லப்படுராங்கன்னு நீலிக் கண்ணீர் வடிக்கும் இவரு, ஒரு மாசம் முன்னாடி அதே ஸ்ரீலங்காவில ஒருபக்கம் தமிழர்கள் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது இவரு பையன் இன்னொரு பக்கம் குத்து பாட்டு ஷூடிங்க்ல இருந்தான்னு பிரஸ்காரங்களக் கூட்டி பாஸ்போர்ட் ஆதாரத்தோட முழங்கினார்.. அப்போ தெரியலையா தமிழனோட வலி?

நடிகர் சங்கத்துல வேற ஒரு நாள் அறிவிச்சு அதுக்கு கட்டுப்பாட்டு வரேன்னு சொன்ன ஒரு ஆள, இங்க ஏன் வரலைன்னு கேக்கிறீங்களே? நீங்க என்ன, உங்க எல்லா அமைப்புக்கும் அவருதான் பிரதிநிதி, தலைவர்னு சொல்லாமல் சொல்லுறீங்களா?

இன்னொருத்தர், பாரதி ராஜா. அவருக்கு எம்ஜியாரு மலையாளின்னோ ஜெயலலிதா கன்னடர் என்றோ தெரியாது... ஐயோ பாவம், ரஜினி மட்டும்தான் தெரியும்... என்ன பண்றது? செலெக்டிவ் அம்னீஷியா அப்படின்னு பெரிய வார்த்தையை எல்லாம் இவருக்கு உபயோகிக்க கூடாது.... டாக்டர்கள் வருத்தப் படுவார்கள்....

அப்புறம் சீமான்.... இவர் வந்து ஒட்டு மொத்த தமிழ் குடும்பத்தின் முகவரி என்று தானே நினைத்துக் கொண்டு இருப்பவர்.... திடீரென்று முளைத்து, அதற்குள்ளாகவே எங்க மைக், எங்க மைக் என்று துள்ளுபவர்....

இவங்க எல்லோருக்கும் ரஜினின்னா ஒரு விளையாட்டு பொம்மை.... ஏன்னா அதப் பத்தி ஏதாச்சும் பண்ணினா ஜனங்க பார்ப்பாங்க, அதுவும் எந்த இடைஞ்சலும் பண்ணாது, ஆட்டுற வரைக்கும் ஆட்டித்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம்.....

ஆனா ஒருநாள் இல்லன்னா ஒருநாள் அந்த பொம்மை, சம்ஹாரம் பண்ணும் ரோபோவாக மாறும்போது அதன் உக்கிரத்தை தாங்க முடியாமல் ஓடுவார்கள்....

அது வரைக்கும் நாம காந்தி சொன்ன மாதிரி கெட்டதை கேக்காம காதையும், கெட்டதைப் பார்க்காம கண்ணையும் முடிப்போம்... என்ன சரியா?

அன்புடன்
ஈ ரா


 
28 Comment(s)Views: 8003

Previous Page
Previous
12
Madhusudhana,Kuala Lumpur, Malaysia
Wednesday, 22nd October 2008 at 23:41:29

I would like to mention here that it is not required for our rajini sir to participate in this bogus porattams. If at all they have the intention of doing correctly , they just need to send an invitation to all the actors,actresses and so on. They cannot force somebody to come and those who don't come cannot be blamed. If Rajini Sir comes they brag about his not being a tamilian , if he does'nt come he is does't bother for tamilians. ALL this is being done with one intention that is to spoil rajini's fame and good will. Which is never going to happen and never will happen. There can be only one superstar and its only Rajinikanth
Anonymous,
Wednesday, 22nd October 2008 at 23:10:08

Superstar fans also think Super
sundar,bangalore
Wednesday, 22nd October 2008 at 23:02:05

This article portrays the real thing,that is happening.This is both humurous and thought-provoking article.

Don't worry or bother about these useless,100% waste fellows.The people understand that they are not interested in the actual problem instead they took the oppurtunity to attack the great man.
I,surely says "no one hodes the sun".
These fellows are come and go,but our thaivar is immortal.
"Truth always triumphs"

T.JAWAHAR,TIRUPUR, INDIA
Wednesday, 22nd October 2008 at 22:53:20

இதெல்லாம் நமக்கு தேவையா, கன்ட நாய் எல்லாம் நம்மை பற்றீ பேசுது, இதுக்கு ஒரு முடிவே இல்லையா. தலைவா போதும்..... மனது வேதனையால் துடிக்குது. 25 வருடமா நீதான் என் தலைவன். மாற்றமுடியவில்லை தயவுசெய்து ஏதாவது ஒரு முடிவு எடுங்கள்.
அன்புடன்
உங்கள் பக்தன்
த.ஜவஹர்

kanthi mathi nathan,india,chennai
Wednesday, 22nd October 2008 at 20:51:31

Dear All,

First you should think all these people cant do anything.This issues to taken in international level only one person can do it.it is thalivar.By his speech he can turn all countries attention.I am a tamilian,I dont have faith in person who says i will work for the upliftment on tamilians and tamilnadu.So need not worry about anything

Anonymous,
Wednesday, 22nd October 2008 at 20:01:12

both rajini and sathyaraaj started thier career in villan roles but today rajini is a world super star and the other one seeking for stage function atleast by which he can show his face in media.

vazhga thalaivar

gopidesingh,chennai,india
Wednesday, 22nd October 2008 at 14:54:15

these people are thinking that they are the representstatives of tamilnadu...tamilnadu border thaanduna yaarunu theriyatha allakkaingala kolaikkura varaikkum kolaingada yena ungalaala athu mattum thaan mudiyum enga thalavaraala mattum thaanda seyya mudiyum
ramasamy,USA
Wednesday, 22nd October 2008 at 14:46:35

TR, Bharathiraja, Seemaan.. all these folks are not the face of tamil community... we shouldn't even give importance to these unmatured idiotic people... TR doesn't have any history of talking maturedly..(search for the video 'comedy 2008 in youtube) it shows the true color of these people..
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information