ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கிட்டத்தட்ட முழுமையான பதிலை ரசிகர்களுக்கு அவர் தந்திருக்கிறார்.
ரஜினி அறிக்கை (சுருக்கமாக):
அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சக நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்கள் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.
அரசியல் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
ஆனால் என் பெயரில் கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் எனது ரசிகர்களோ மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி துவங்கும் நிலையில் நான் இருந்தால் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்துக் கொள்வேன், என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் நகலை கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்.
- Sanganathan
|