Other Articles
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
(Thursday, 2nd October 2008)

தான் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்; உலக அளவில் போற்றப்படும் நடிகர் என்ற நினைப்பு ஒருநாளும் இருந்ததில்லை ரஜினிக்கு. எப்போதும் எளியோனுக்கு எளியோனாய், மனதவில் ஒரு யோகியைப் போலவே வாழ்பவர் அவர்.

நடிப்பு, தொழில் என்று வந்துவிட்டால் நமது தலைவரின் ஈடுபாட்டுக்கு நிகரே கிடையாது. ஒரு காட்சியை இயக்குநர் மனம் திருப்தியுறும் விதத்தில் அவர் நடித்துக் காட்டும் பாங்கிருக்கிறதே... அதை நேரில் பார்த்து அனுபவிப்பது ஒரு தனி பரவசம். பல முறை அந்தப் பரவசம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

தான் எடுத்த முடிவில் ஏதாவது மாற்றம் வேண்டியுள்ளதா என தன் மீது அக்கறை கொண்ட அனைவரிடமும் எத்தனை முறை வேண்டுமானாலும் கருத்துக் கேட்கும் நம்பர் ஒன் ஜனநாயகவாதி அவர். ஆனால் முடிவு எடுத்த பின் அதிலிருந்து பின்வாங்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...

அதுதான், ‘யோசிக்காம பேசமாட்டேன்; பேசின பிறகு யோசிக்க மாட்டேன்’, என ஒரு வரி திருக்குறளாய் அவர் வாய் மொழியாகவே மலர்ந்தது. இது அவர் பாபாவில் பேசிய வசனம் மட்டுமல்ல... ரஜினியின் வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியான கட்டமாகப் பார்க்கப்பட்ட 2002- காவிரி உண்ணாவிரதத்துக்கு இரு தினங்களுக்கு முன் அருணாச்சலா ஓட்டல் அறையில் அவர் உணர்ச்சி வேகத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல அதை பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன் அந்தப் போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்த தமிழ்நாடு எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள் ஐவரில் நானும் ஒருவன்!).

எனவே ரஜினி என்ற உண்மையான மனிதரைப் பற்றி இட்டுக் கட்டிய செய்திகளைத் தரவேண்டிய அவசியம் நமக்கில்லை... அந்த மகா திருப்பணியைச் செய்ய ஆவிகள், ஜூவிகள் மற்றும் ரிப்போர்ட்டர்கள் இருப்பதால் அவர்கள் ஏரியாவுக்குள் நாம் நுழைவதும் இல்லை.

இந்த மாதிரி பொய்களைப் படித்தே பழகிவிட்ட நமது நண்பர்களுக்கும், உண்மைக்கும் புனை கதைகளுக்குமான வித்தியாசம் தெரிய மறுப்பதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை!

ரஜினியின் எதிர்காலத் திட்டங்கள், ரசிகர்களுக்காகவும் தன்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்யத் திட்டமிட்டுள்ள நல்ல காரியங்கள் பற்றியெல்லாம் நம்மிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவர் லதா ரஜினிகாந்த் அவர்களின் மிகமிக நெருங்கிய உறவினர். நமது நீண்ட கால நண்பர். ஒரு விதத்தில் மூத்த பத்திரிகையாளர்.

அவர் பெயரை வெளியிட்டால்தான் நாம் தரும் செய்திக்கு நம்பகத் தன்மை கிடைக்கும் என்றால் இனி பல நல்ல தகவல்களை தரமுடியாமலே போகக் கூடும். தகவல் தருபவரின் அடையாளத்தைக் காப்பாற்றுவது மிக முக்கியம்!

நம்முடைய நோக்கம், ‘இதோ வருகிறார் ரஜினி... அங்கே ஜோசியம் பார்த்தார்... 9-ம் தேதி கொடியேற்றுகிறார்...’ என்றெல்லாம் கூறி, ரசிகர்களின் பாக்கெட்டுகளில் கையைவிட்டு பர்ஸடிப்பதல்ல..!

நிறைய பேர் நினைப்பதுபோல் ரஜினி செய்தித்தாள்களைப் படிக்காதவரல்ல... இணைய தளங்களைப் பார்க்காதவருமல்ல. தன்னைப் பற்றிய ஒரு செய்தி யார் மூலம் எப்படி மீடியாவுக்குப் போகிறது என்பது உள்பட ரஜினிக்கு எல்லாம் தெரியும்...

ஆனால் எதையும் அவர் தடுப்பதில்லை. ‘தன் பெயரில் யாராவது பத்திரிகை நடத்துகிறாரா... நடத்திக் கொண்டு போகட்டும். அதன் மூலம் நேர்மையாக அவர் பிழைத்துக் கொண்டால் போதும்’ இதுதான் ரஜினி வழி!

அல்லது அவரைத் திட்டி எழுதினால்தான் ஒருவருக்கு வயிறு நனையும் என்றால் அதையும்கூட அனுமதிக்கும் பெருந்தன்மையாளன் இந்த மனிதன்.

இந்த ரஜினிபேன்ஸ் வலைதளம், அதில் வருகிற எழுத்துக்களின் பின்னணி, எந்த பலனும் எதிர்பார்க்காமல் தனக்காக மீடியாவில் மல்லுக்கட்டிக் கொண்டு எழுதுபவர்கள், பத்திரிகை ஆரம்பிக்க விண்ணப்பம் கொடுத்திருப்பவர்கள், தனக்காக பிளாக் எழுதும் சில ரசிக்க நெஞ்சங்களின் உள்ளக் கிடக்கை... இப்படி எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மனித ‘எந்திரன்’ அவர்!

ஆனால் ஒரு நல்ல தலைவன் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் நடக்காது.

அதனால்தான் தலைவர் அமைதி காக்கிறார். அவரது அமைதியில் அர்த்தங்கள் ஆயிரம்.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை அழுந்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன், ரஜினியின் உலகத்தை சற்றேனும் எட்டிப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில்....

ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!

- Sanganathan


 
25 Comment(s)Views: 4256

12Next Page
Next
Sridhar Ramachandran,
Sunday, 5th October 2008 at 04:40:09

Raj - I do not want any money from anyone for free. With due respect, I would like to say that you missed the point. That number: 10 was just a subjective number as you might already know. Rajini is great for sure. He has come up in his life by his hard work, etc.etc. But if you/me want a role model for the professions that most of us are in, you do not need an actor to be your role model. Instead, there are many many Drs, scientists, engineers ,... around you. But if people want to think about a man/actor who is capable of earning crores for his own family , well, then ... it is their choice. That's all. Nothing more to say.
Anonymous,
Sunday, 5th October 2008 at 01:58:43

//அல்லது அவரைத் திட்டி எழுதினால்தான் ஒருவருக்கு வயிறு நனையும் என்றால் அதையும்கூட அனுமதிக்கும் பெருந்தன்மையாளன் இந்த மனிதன்.
100% true..............

Raj T,usa
Saturday, 4th October 2008 at 12:10:40

Hello " Sridhar Ramachandran"

How much is required for one generation in your estimate?

you want rajini to pay you to get a life for one generation or what?? Just because you watched his movie for 3 hours?

Remember this, MAJORITY OF HIS FANS ( LIKE ME) WE TOOK HIS LIFE AS A ROLE MODEL AND WE HAVE SUCCEEDED IN OUR PROFESSION! RAJINI IS ALL ABOUT POSITIVE ENERGY!

padmanabhan,bangalore
Saturday, 4th October 2008 at 04:12:29

Rajini's chracter is of live and let live personality. As fans let us not pressurize him that just because chiranjeevi has started party rajini should start party. The yardsticks and parameters of chiranjeevi and rajini differs a lot.Let rajini decide whole heartedly whether ot start party or not. If he is interested well and good and if he is not there is no harm in it. Media persons and Anti rajini people should understand Rajini has huge fan following due to his affection or kindness and his helping tendency.
Sridhar Ramachandran,
Saturday, 4th October 2008 at 00:44:37

Take care of you and your family first. Our thalivar has enough money to take care of 10 generations. But us?
Raj T,usa
Friday, 3rd October 2008 at 18:57:03

சத்தியமான உண்மை குமார்!!!
4. ரஜினி-ஐ கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ரசிக்கும் ரசிகன் என்ற முறையிலும்..அவரின் almost எல்லா படங்களை முதல் நாள் பார்க்கும் ரசிகன் என்ற முறையிலும்..ஆரம்ப காலங்களில் அவர் சொன்ன அறிவுரைகளை கேட்டு.. இன்று நல்ல நிலையில் இருக்கும் ஒருவன் என்ற முறையிலும், நான் சொல்வது இது தான்.


( நானும் தான் குமார்!!!)


.ரஜினி ரசிகர்களை நேரில் பார்த்தால் சொல்வது.. வேலை-ஐ ஒழுங்காக செயுங்கள் ..வீட்டை கவனியுங்கள் என்றுதானே ஒழிய.. நாமெல்லாம் அரசியல் செய்வோம் வாருங்கள் என்று அல்ல..கண்டிப்பாக பல இளைஞர்கள் அவரை சந்தித்து இருப்பீர்கள்..இப்போது இல்லை என்றாலும் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன் சந்தித்தவர்களுக்கு

BAS...BASHA,chennai
Friday, 3rd October 2008 at 11:42:32

Dear KUmar,


Excellent feed back from you!..... I heartly accept what you said..... really We fans are not understanding Thalaivar Feelings and Motive....

SIMPLY FORCING HIM TO DO WHAT WE THINK, which is 100% Stupid thing..... (sorry to hurt friends) We can request him but We should be patient and listen and give imp to Thalaivar Feelings....

He is Great human being Pls Leave him to LIVE for 100 Years.... We His Fans SUrely need to do that.........

Bas...basha

These are few words from Mr. KUmar feed back which really Affect me lot : Pls Friends read This : ( அவர் நான் அரசியலுக்கு வருவதாய் இல்லை என்றால்..என்ன செய்வீர்கள்..கொடும்பாவி எரித்து..Banner கிழித்து..இணையத்தில் இன்று PRO -வாகவே தங்களை நினைத்தும் கொள்ளும் சிலர் "Anti"-rajini..வலைப்பதிவு தொடங்குவீர்களா ??

ஏதோ சில நடிகர்கள் ஏதோ அரசியலில் சாதித்து விட்டதை போல நீங்களே பரப்பினால்..எப்படி..? சரி அவர்களை விடுங்கள் நீங்க கூட..அரசியலில் வந்து.. அகப்பட்டதை சுரிட்டிகொள்ளத்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்ரிர்களா.?

3. ஒருவர் தன்னுடைய ரசிகர்களையே பார்க்க தயங்கும் அளவிற்கு அல்லவா ஒரு சில ரசிகர்களின் செய்கைகள் உள்ளன..இதை யாரவது மறுக்க முடியுமா?

உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் அவருக்கு இன்று கொடுப்பது தலைவலியும்.. மன வலியும் தான்.

வருத்தத்துடன்

குமார் )

Raja,Washington,DC
Friday, 3rd October 2008 at 10:28:01

ரஜினி ஏமாறவும் மாட்டார். ஏமாற்றவும் மாட்டர்.


R.RAMACHANDRAN,tiruppur/india
Friday, 3rd October 2008 at 09:48:43

DEAR MR. KUMAR,
Absolutely Correct.

M.kamatci nathan,qatar/doha
Friday, 3rd October 2008 at 07:04:40

dear fans,
first i will thanks to mr.kumar, kumar nan enna ninaikinreno athai neengal koorineergal.thalaiva you are a leader YOU SHOULD LEAD EVERYBODY , YOU SHOULD NOT FOLLOW ANY BODY. so if you are a good rajini fans,you should follow our thalaivar.thank you very much all fans. JAI HIND

alex,tuticorin
Friday, 3rd October 2008 at 06:56:25

dear kumar your view touched our hearts.its true so Friends please understand thalaivars felleings and WAIT
SRIRAM,Chennai
Friday, 3rd October 2008 at 04:12:30

Dear Kumar,

Excellent observations by you. Highly sensible and practical thinking. I fully agree with you. I am also a Rajini fan for the past 25 years and I am also in a good position following some of his good advise. People like Kumar should be with Rajini always giving their best opinions and Iam sure he will be already having such wellwishers around him.

Rajasekar,Qatar
Friday, 3rd October 2008 at 03:57:18

குமாரின் பதிவிற்கு நன்றி. அது உண்மையும் கூட. அவரை அவராகவே வாழ விடுவது தான் நல்ல ரசிகனின் கடமை.
santhosh,chennai
Friday, 3rd October 2008 at 03:34:43

hi all wt ever happening around Rajini, he will aware on that. so as a FANS, we have to follow him. so kinldy arrange a meet for us and let discuss on wt to do on Thlivar Birhtday. my contact number is 9841752821. if possible make an arrangement and we can discuss on it.
Murale,india / chennai
Friday, 3rd October 2008 at 02:53:17

இதில் எமதுவதற்கு தலைவருக்கு என்ன இருக்கிறது ?

எபோழுதும் எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் நாம் ஒன்றும் எதிர் பார்க்காமல் இருந்தாலே போதும் !

எது எப்படி நடந்தாலும் அந்த சந்தர்பத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இருந்தால் எல்லாம் சுகமே

SRIRAM,Chennai
Friday, 3rd October 2008 at 01:08:30

Dear Sanganathan,

Thank you very much for this information. We all know about our Thalaivar very well and we are here to support him to the core. He has the largest heart to forgive even the worst enemy. To forget is human and to forgive is divine.
We all know how much Thalaivar loves the people of Tamilnadu and his fans across the globe. Let us not jump into conclusions on our own and pressurise Thalaivar. God is with him and true wellwishers are always with him. He is in our prayers. Long Live Superstar Rajini and his great values.

Kumar,
Friday, 3rd October 2008 at 01:00:14

இந்த வலைபதிவில்.. இந்த கருத்தை ஏற்கும் அளவிற்கு..மனபக்குவம் இருக்குமா என்று தெரியாது..எனினும்..நானும் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன் என்ற முறையில்..இதை பதிவு செயய கடமை பட்டதாக நினைக்கிறேன்....

ரஜினி-ஐ நாம் தலைவர் என்று ஏற்று கொண்டுவிட்டோம்..ஆனால் நம்மை அவர் தொண்டராக ஏற்று கொண்டாரா..? இல்லை அவரை ஒரு தலைவனாக அவர் பார்கின்றாரா? என்று நம் சிந்தனை-ஐ செலுத்தினால்...புரியும்..

.அவர் மீது எந்த ஒரு குறையும் இல்லை..ஆனால் அவர் ரசிகர்கள் மீது..நிச்சயமாக பல குறைகள் உண்டு..என்பது என் கருத்து....

1 . அவரின் ஒவொரு நடவடிக்கையும் தான் ஒரு சாதரண மனிதனாகவே வாழ விரும்புவது புரியும்..ஆனால்..அந்த நடவடிக்கைகளை கூட.. ஒரு சில ரசிகர்கள்..பலவாராக கருத்து கற்பித்து..அவர்களாகவே பலவற்றை கற்பனை செய்து..செய்தி பரப்புவது..ஒரு மாபெரும் குற்றம்..இல்லை என்று நீங்கள் சொன்னால்..ஒரு பத்திற்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் அறிவிக்க படாத செய்தி தொடர்பாளர்கள் போல செயல்படுவதை என்னால் எடுத்து காட்ட முடியும் ..சரி ..இவர்கள் சொல்வதில்... எவ்வளவு உண்மை என்பது..அதற்கு முந்தைய பதிவுகளை பார்த்தால் புரியும்..இவர்கள் செய்வது..ஒன்றுமே இல்லாததை பெரிதாக்கும் செயலக தான் படுகிறது....இணையத்திலேயே இப்படி என்றால்.. இதை வாய் மொழியாக பரப்பும் சில ரசிகர்களை பற்றி சொல்ல தேவையே இல்லை..

எடுத்து காட்டு : இப்போது இருக்கும் சூழ்நிலை-ஐ எடுத்து கொள்ளுங்கள்.. ரஜினியோ அல்லது அவரை சேர்ந்த எவரும் ரஜினி ஏன் ரசிகர்களை சந்திக்கிறார் ..அல்லது எந்த தேதிகளில் சந்திப்பார்..என்று கூறவில்லை.. ஆனால் அதற்கு, கண் காது..மூக்கு.. வைத்து.. இன்று அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை என்றவுடன் .. அதற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பது ....இன்னொரு கதை என்று போய் கொண்டு இருக்கிறார்கள்..

2. ரஜினி தன்னுடைய எண்ணமாகவே ஒரு கருத்தை சொன்னால்..ரசிகர்கள் ஏற்று கொள்வது இல்லை..அவர்களுக்கு பிடித்த கருத்தை தான் ரஜினி சொல்லவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்..
அவர் நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று சொன்னதயும்.. அல்லது..அரசியல் பற்றிய தன்னுடைய கருத்துகளை கூறிய போது ஏற்று கொண்ட ரசிகர்கள்.. அவரே.. அது என்னுடைய கருத்து அல்ல ..யாரோ எழுதி கொடுத்தது என்று கூறிவிட்ட பொது.. ஏற்க மறுபதன் காரணம் என்ன..? அதற்கு ஏன் போராட்டம்..பின்னர் அதை நீக்கி விட்டதற்காக ஒரு நன்றி..!! இவ்வாறு இருக்கும் நிலையில்.. அவர் நான் அரசியலுக்கு வருவதாய் இல்லை என்றால்..என்ன செய்வீர்கள்..கொடும்பாவி எரித்து..Banner கிழித்து..இணையத்தில் இன்று PRO -வாகவே தங்களை நினைத்தும் கொள்ளும் சிலர் "Anti"-rajini..வலைப்பதிவு தொடங்குவீர்களா ??

எந்த ஒரு மனிதனுக்கும் தன்னுடைய வாழ்கை-ஐ பற்றி ..தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்ற முடிவு செய்ய அதிகாரம் உண்டு.. அதில் தலயிட எவருக்கும் உரிமை இல்லை..அவரை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறீர்கள்..அவர் வேலை-ஐ ஒழுங்காக செய்ய விடுங்கள்..

ஏதோ சில நடிகர்கள் ஏதோ அரசியலில் சாதித்து விட்டதை போல நீங்களே பரப்பினால்..எப்படி..? சரி அவர்களை விடுங்கள் நீங்க கூட..அரசியலில் வந்து.. அகப்பட்டதை சுரிட்டிகொள்ளத்தான் ரஜினியின் ரசிகர்களாக இருக்ரிர்களா.?

3. ஒருவர் தன்னுடைய ரசிகர்களையே பார்க்க தயங்கும் அளவிற்கு அல்லவா ஒரு சில ரசிகர்களின் செய்கைகள் உள்ளன..இதை யாரவது மறுக்க முடியுமா?

4. ரஜினி-ஐ கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ரசிக்கும் ரசிகன் என்ற முறையிலும்..அவரின் almost எல்லா படங்களை முதல் நாள் பார்க்கும் ரசிகன் என்ற முறையிலும்..ஆரம்ப காலங்களில் அவர் சொà®

m.mariappan,india/tuticorin
Friday, 3rd October 2008 at 00:52:44

Dear Thalaivar

Day to day coming a political party in Tamil nadu without mass.

But very big mass man mr.rajini sir why he is not starting political line still date.
and Why his fans not coming to any party.

This above two question asking by all political
leader.

Because we believe Rajini sir,

Rajini sir Believe us.
sakthi,chennai
Friday, 3rd October 2008 at 00:31:59

Dear Sanganathan,

Thank you so much for reveling other side of Thalaivar and give us a confident about Tamilnadu's future. Yes, Rajini's further action will definitely have a great impact on Tamilnadu's future development.

Let the Good man rule us.

- Sakthi

Baskar,India/Hosur
Friday, 3rd October 2008 at 00:22:39

hi Sanganathan.
thank you, thank you very much for your time to bring out this article.
my god, believe it or not, i am very happy after reading this article. All the things which you said are true, but many dont know it.
and i was very happy when you mentioned that, our Thalaivar is even updated of what is happening in our website [the only website in the world which is been run by the fans for their thalaivar]--proud to say it.

thank you once again. and as you said, i really believe that'our Thalaivar wont disappoint his fans'
--Jai Hind.

12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information