Other Articles
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
(Tuesday, 30th September 2008)
இதற்கான பதிலை நாமே சொன்னால் அது ரஜினி மீதுள்ள ப்ரியத்தில் கூறியதாகத்தான் நமது நண்பர்களே நினைப்பார்கள்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?

இதோ அரசியல், வணிகம், சினிமா என பல துறைகளைச் சேர்ந்த ஒரு 10 விஐபிக்களிடம் நான் நேரடியாகப் பேசியவற்றிலிருந்து இந்தக் கேள்விக்கான பதிலாய் தருகிறேன்!

சு.திருநாவுக்கரசர் – பாஜக தலைவர்

அவர் எப்போதோ கட்சி ஆரம்பித்திருக்க வேண்டியவர். ஆனால் பல காரணங்களால் அது இன்னமும் நடக்கவில்லை. இன்றைய சூழலில் கூட முதல்வர் பதவிக்கான் வேட்பாளர் என்று அவர் தன்னை முன்னிறுத்தி மக்களைச் சந்தித்தால் தமிழ்நாட்டு அரசியலே தலைகீழாகிவிடும். ஆனால் செய்வாரா... தெரியவில்லை.
அவர் சொல்வதுபோல காலம்தான் இதற்கு பதில் சொல்லும்.

பி.வாசு – இயக்குநர்

ரஜினி சார் இன்னும் அரசியல் பத்தி வெளிப்படையா எதுவும் அறிவிக்கல. அதனால் நானும் ஓபனா பேச முடியாது. ஒருவேளை ஆரம்பிச்சார்னா, நிச்சயம் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயம் செய்யும் சக்தியாக அவர் இருப்பார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார் என நம்புகிறேன்.

எனக்கென்னமோ அவர் மிகப்பெரிய உயரத்தைத் தொடப் போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது. பார்க்கலாம்!

சோ – பத்திரிகையாளர்

எதுக்கு இப்போ இந்தக் கேள்வி?

அவர் முதலில் தன்னைத் தயார்படுத்திக்கிட்டு வரட்டும் சொல்றேன்.... இன்னொன்னு நான் யாரை பாராட்டுகிறேனோ அவர்கள் பெருசா வர்றதில்லை. அதனால இனி ரஜினியை நான் பாராட்டப் போறதில்லை. கடுமையா விமர்சிக்கப் போறேன்.

அப்பதான் அவர் எம்ஜிஆர் மாதிரி முதல்வர் ஆகி இன்னும் என்னோட விமரிசனங்களுக்கு ஆளாவார்னு நம்பறேன்...!!

மோகன்பாபு – நடிகர்

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி ஒரு வருஷம் கடுமையா கவனம் செலுத்தினாலே போதும், இந்த தமிழ்நாட்டின் அதிகாரம் அவர் கைக்கு வந்துடும்.

நான் பலமுறை அவன்கிட்ட சொல்லியிருக்கேன்...

‘டேய் கட்சி ஆரம்பிச்சு, இந்த ஜனங்களுக்கு இன்னும் நிறைய செய்டான்னு... ஆந்திரா அரசியல்ல நான் ஒரு எம்பியாக இருந்தேன். அவ்வளவுதான். அங்க பெருசா செய்ய முடியல. ஆனா ரஜினி கட்சி ஆரம்பிச்சான்னா உச்சத்துக்குப் போவான். இது அவன் ராசி. சினிமாவில் இப்போ அவன்தான் முதல்வர். அரசியலிலும் இது நிச்சயம் நடக்கும்... அப்போ இந்த மோகன்பாபுவை நினைச்சுக்கங்க.

எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தான்னா... நான்கூட அவன் கட்சியில சேர்ந்துருவேம்பா... ஜோக் இல்ல.. சீரியஸாதான் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டுல செட்டில் ஆகற ஆசையிருக்கு!

எஸ்பி முத்துராமன் – இயக்குநர்

நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவேன்னு நினைச்சீங்களா... மாட்டேன்.

கட்சி ஆரம்பிச்சு முழுசா இறங்கினார்னா, ஒரு முதல்வரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும். ஆனா அவர் இயல்புக்கு அரசியல் சரிப்படுமா என்பதை அவர்தான் தீர்மானிக்கணும்.

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சுடுச்சா....!

வெங்கட் பிரபு – இயக்குநர்

சார் கட்சி ஆரம்பிச்சா நிச்சயம் ஜெயிப்பார். ஆனா எங்களுக்கு சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டாரான ரஜினி சாரும் வேணுமே... அதான் பிரச்சினை. என்னை மாதிரி உள்ளவர்கள் ரஜினியை அரசியல்ல பெரிய தலைவரா பார்க்கவும் ஆசைப்படறோம், சினிமாவில சூப்பர்ஸ்டாரா இருக்கணும்னும் ஆசைப்படறோம்.

பேராசைதான்... ஆனா சார் விஷயத்தில அந்த அளவெல்லாம் கிடையாது.

வடிவேலு - நடிகர்

‘பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு... அதை விட்டுட்டு இந்த புனிதமான அரசியலை ஏன்யா பயன்படுத்தறீங்க!’-ன்னு தன்னோட படத்துல கேட்டவர் அண்ணன் சூப்பர்ஸ்டார்.
எனக்கு ஒரு பிரச்சினை வந்த உடனே நான் கட்சி ஆரம்பிப்பேன், தேர்தல்ல நிப்பேன்னு கொதிச்சிட்டேன். நான் கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். அதுல மாற்றமில்ல.

ஆனா எவ்வளவோ சோதனைகளுக்குப் பின்னும் அமைதியா, தன் வழியில போயிட்டிருக்கிற ரஜினி சாரை நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படியொரு மனுஷன் அரசியலுக்கு வரணும்... நிறைய செய்யணும்.

அன்புமணி – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்

இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. எந்தக் கொள்கையுமில்லாமல், வெறும் நடிகர் என்ற புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
ரஜினி வரட்டும்... தன் கொள்கைகளைச் சொல்லட்டும். அவற்றுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையப்போகிறது.

தங்கராஜ் – ஐஏஎஸ் அதிகாரி

நல்ல விஷயம்தான். நான் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ரஜினியை விரும்புகிறேன். அவரது கொள்கைகளும், மக்களிடம் அவரது அணுகுமுறையையும் பொறுத்து அவரது அரசியல் வெற்றி அமையும். மற்றபடி நான் அரசியல் பேசக்கூடாது.

தொல் திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்

அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்பதை விடுத்துப் பேசுகிறேன்... ரஜினியின் இயல்புக்கு அரசியல் சரிப்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. மற்றபடி நல்ல மனிதர்.
அவருக்கு அரசியல் களப்பணி தெரியாது. அவர் கட்சி ஆரம்பித்து களத்துக்கு வந்தால்தான் எதையும் கூறமுடியும். மீடியா பிம்பத்தையும் உங்களைப் போன்ற பத்திரிகையாளர் யூகங்களையும் மட்டுமே வைத்து நான் எந்தக் கருத்தைச் சொல்வது?

ரஜினி இதுவரை அரசியலில் இல்லை. அவர் அரசியலில் இறங்கட்டும், வெற்றி வாய்ப்பு குறித்துப் பிறகு பேசலாம்.

- Vinojasan

 


 
33 Comment(s)Views: 5855

Previous Page
Previous
123Next Page
Next
chandrakanth,Bangalore
Tuesday, 30th September 2008 at 02:46:45

Thalaivaa..come to politics and do good for Tamilnadu
vishali,Vietnam
Tuesday, 30th September 2008 at 02:30:56

ஒரு சகோதரியின் வேண்டுகோள் ‍இது வன்முறை வியாபாரிகளை பார்த்த நமக்கு ஒரு நல்ல பண்பானவரை அரியணையில் காண ஒரு வாய்ப்பு. நடக்க வேண்டுமே.
kukan,srilanka
Tuesday, 30th September 2008 at 02:05:05

ரஜினியால் நாம் விடுதலை அடைவோம் என நம்புகின்ரோம்.
GANESAN.R,INDIA/THENI,UTHAMAPALAM
Tuesday, 30th September 2008 at 02:01:59

THALAIVA ALL PEOPLE VAITING FOR YOU, VERY VERY THANKS FOR YOURS INFORMATION
govind,abu dhabi
Tuesday, 30th September 2008 at 01:57:27

மற்ற அரசியல் தலைவர்களைவிட ரஜினி அவர்களுக்கு ஒரு நல்ல ஆதரவு உள்ளது, அரசியலுக்கு களப்பணிதான் முக்கியம், அதேவேளை களப்பணிக்கு தொடண்டர்கள் எப்பொழுதும் தயார், தலைவரின் அதிகமான தமிழக சுற்றுபயணம் மிக மிக முக்கியம், வெற்றி என்பது அவ்வளவு எளிதல்ல, தீர்க்கமான அரசியல் கொள்கைக்ளை தாயார்படுத்தவேண்டும்,சாதி,மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்கும் அளவிற்க்கு நமது இயக்கம்/அரசியல் கட்ச்சி இருக்க வேண்டும், முதலில் இயக்கம் ஆரம்பித்து நமது தோழ்ர்களை ஒருங்கினைத்து,செய்ல்பாடு, திட்ட்மிடுதல் மற்றும் இளைஞர் அணி, மருத்துவ அணி, வழக்குறைஞர் அணி ஆகியவற்றை ஏற்படுத்தி மக்களுக்கு என்ன தேவைகள் அவசியம் என்பதை மனது இயக்கம் மூலம் செய்து மக்களின் பாராட்டுதலை பெறுவது அவசியம், இதன் மூலம் நமது தலைவர் நம்மிடையே அதிகம் உறையாற்ற வழி பிறக்கும், இயக்கம் வெற்றி பெற்று அடுத்த இலக்கு அடையவும் நமது செய்ல்பாடுகள் நம்மை வெற்றிபாதைக்கு அழைத்து செல்லும்
D.Karthikeyan,india/chennai
Tuesday, 30th September 2008 at 01:53:07

Thaliva unnakku makkallukka ethavathu seiyanum ninaithena unnia araciyallukkundana thakuthi pattithikko ennaa oru cill ruukku pathill solliyaka vedum atha samathil yarrium pathikka kuttadhu enna unnodaiya kunam appati kanttpa god with you pls take action to C.M pls pls pls pls ithuvarai uunoda god irruthu unnai superstar akkiruukarru C.M postaium ippo unnakkaa athai seiya god with you.
vasuhi,srilanka
Tuesday, 30th September 2008 at 01:47:09

good article. thanks
Purushothaman Menon,Cochin
Tuesday, 30th September 2008 at 01:24:52

Tamilians
m.mariappan,india/tuticorin
Tuesday, 30th September 2008 at 01:18:26

Dear thalaiva

We believe you. We know your tallents and brisk

A.Sundaresan,Oman/Chennai
Tuesday, 30th September 2008 at 01:11:15

we want offical statemen from our thalivar than Tamilnadu (INDIA) get one super CM in his histroy
mahaaraja,madurai
Tuesday, 30th September 2008 at 01:04:02

from my child hood life i like very very much. i am the fan of rajini. now i am a magician. after seeing an rajini styles only i thought i want to become an magician...... now i am a no.1 magician in tamilnadu........ i love rajini......
sathesh arumugam,India , Dharmapuri
Tuesday, 30th September 2008 at 01:02:34

Thalaivar,ethum pesa vendam just oru paarvai namba pakkam parkattum, appuram parunga tamilnada avar pakkam irukkum, idhu thalaivar mela anai!!!!
mahaaraja,madurai
Tuesday, 30th September 2008 at 01:00:34

we all know that rajini can become an CM. but only thing is that he cant leave his film industry. if he comes to politics means he cant able to act in a film. so only he was waiting.this is an true pridiction........ think that we need rajini as a super star or CM........thats in the rajini fans hand and peoples hand........
Previous Page
Previous
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information