Other Articles
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
(Saturday, 27th September 2008)

தலைவா வா... தலைமை ஏற்க வா!!

இது நமது விருப்பம் மட்டுமல்ல... லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உள்ளக் கிடக்கையும்கூட. அதுவே போஸ்டர்களாக, பேனர்களாக சென்னை நகரை ஆங்காங்கே அலங்கரிக்கின்றன.

ரஜினி, புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் மகாத்மா காந்தி, காமராஜர், விவேகானந்தர், காயிதே மில்லத், தேவர் போன்ற பெரும் தலைவர்களோடு ரஜினியை ஒப்பிட்டு அர்த்தமுள்ள வாசகங்களை அச்சிட்டுள்ளனர் ரஜினி மன்றத்தினர்.

இந்த முறை நிச்சயம் தலைவரிடமிருந்து சாதகமான முடிவு வரும் என தீவிரமாக நம்புகின்றனர் பெரும்பாலான ரசிகர்கள்.

அந்த நம்பிக்கையில்தான் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் இதே போன்ற பேனர்களை இன்னும் சில தினங்களில் வைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.

உண்மையில் வேறு யாருக்கும் கிடைக்காத அற்புதமான ரசிகர்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதுபற்றி பின்னொரு சமயம் அலசுவோம்.

இன்று வருகை!

முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று இரவு சென்னை வருகிறார் தலைவர். இது போயஸ் கார்டனிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு.

தலைவரை விமான நிலையத்தில் பெரும் திரளாக வரவேற்க முதலில் திட்டமிட்டிருந்தனர் ரசிகர் மன்றத்தினர். 1996 தேர்தலின் போது ரஜினிக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு இணையாக ஏற்பாடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரஜினி அதை விரும்பமாட்டார் எனப் புரிந்து இப்போது ஆர்ப்பாட்டம், அமர்க்களம் எதுவும் வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் இன்று மாலை நெருங்க நெருங்க ஒரு வேகத்தில் அனைவரும் விமான நிலையத்தில் குவிந்தாலும் வியப்பதற்கில்லை.

இதுகுறித்த சிறப்புச் செய்திகளை நேற்றிலிருந்தே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன.

தாயகம் திரும்பும் தலைவருக்கு இனிய வரவேற்புகளை நாமும் ரசிகர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

- Sanganathan 
 

 


 
50 Comment(s)Views: 7069

Previous Page
Previous
1234
Previous Page
Previous
1234

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information