Other Articles
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
(Friday, 26th September 2008)

லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை பற்றி நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் உள்ளனர்.

ரஜினி இதுவரை முதல்வர் பதவிக்கான போட்டியில் நேரடியாக இல்லை. எந்த அரசியல் கட்சியும் தொடங்கவில்லை.

ஆனாலும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் தமிழக அரசியல் ரஜினியைச் சுற்றித்தான் இயங்குகிறது.

பத்திரிகைகளுக்கு அவர்தான் படியளக்கிறார், கவர் ஸ்டோரி வடிவில்.

அவர் எப்போது வருவார், எப்படி வருவார் எனத் தெரியாமலேயே... பத்திரிகைகளும் பதினைந்து ஆண்டுகாலம் ரஜினி குறித்த சிறப்புச் செய்திகளைப் பிரசுரித்து வருகின்றன.
இதில் ஒருமுறைகூட ரஜினியின் கருத்துக்கள் இடம் பெற்றதில்லை.

எல்லாமே யூகங்கள்தான். அவரைச் சந்தித்துக் கருத்துக் கேட்டு வெளியிட முடியாத கையாலாகாத்தனத்தை கவர் ஸ்டோரியாக்கிவிடுவதுதான் இத்தனை ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.

யூக அடிப்படையிலேயே அவர் மீது குற்றம் சுமத்தி யூக அடிப்படையிலேயே அவருக்கு தண்டனையும் தரும் வினோத கோர்ட் நமது மீடியா உலகம்தான்.
இவர்களுக்கு தீனி போடும் வித்த்தில் லயோலா கல்லூரி ஒரு கருத்துத் திணிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதற்கான அவசியம் இப்போது என்பது தினமலரின் செல்லப்பிள்ளை விஜய்காந்துக்கும் லயோலாவின் செல்லப்பிள்ளை விஜய்க்குமே வெளிச்சம்!

ரஜினிக்கு சுத்தமாக செல்வாக்கே இல்லை என்கிறது அந்த கருத்துத் திணிப்பு. அவர் அரசியலுக்கு வரவே கூடாது என்கிறது இதே கருத்துத் திணிப்பில் கூறப்பட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரம்.

ஏதோ ரஜினிக்கு எதிராக வேண்டுமென்றே இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தியதாக நாம் கூற வரவில்லை.

இப்போது இந்தக் கணிப்பு... அதிலும் ரஜினி பற்றிய கணிப்புக்கு அவசியமென்ன...?

எப்போது அக்டோபர் புரட்சி, ரசிகர் மன்ற சந்திப்பு என ராகவேந்திரா கல்யாண மண்டபம் பரபரப்படைந்ததோ... அப்போதே உளவுத் துறையும் சில உதவாக்கரை அமைப்புகளும் தங்கள் விஷம வேலைகளில் இறங்கிவிட்டனர்.

அவற்றில் ஒன்றாகத்தான் இந்த கருத்துத் திணிப்பையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
வெறும் 2000 பேரிடம் எடுக்கும் கருத்துக்களின் மாதிரி 7 கோடி தமிழர்களின் மனவோட்டத்தைச் சொல்லும் மந்திரமாகிவிட முடியாது.

ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மலை-மடு வித்தியாசம் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும்.
ஆனால் கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்ட லயோலா கல்லூரி, ரஜினியை மட்டம் தட்டுவது போலவும் விஜய்காந்தை ஓவராகப் பாராட்டியும் கருத்துத் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. தவறான ஒப்பீடும் கூட.

விஜய்காந்த என்ற நபர் தனது சரிந்துவிட்ட சினிமா செல்வாக்கைத் தூக்கி நிறுத்த அரசியலுக்கு வந்தவர். தனது குடும்பத்துக்காக அதிகாரத்தைப் பிடிக்க முயல்பவர்.
ஆனால் ரஜினி அப்படியா... தேடி வந்த முதல்வர் பதவியையும் துறந்தார். அவரது உத்தம குணம் ஊரறியும்.

இன்னொன்று இதுபோன்ற கணிப்புகளில் சாதக முடிவு வந்துவிட்டால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் திட்டுவதும் கூடத் தவறுதான். இவற்றை நாம் ஒரு பொருட்டாகவே மதிக்கத் தேவாயில்லை. காரணம் லயோலா கணிப்புகள் எப்போதும் தோற்றே வந்துள்ளன... எப்போதாவது தெரியாமல் நிஜமானதும் உண்டு. எனவே மீண்டும் சொல்கிறோம்... லயோலா கணிப்புகள் சாதாரண மக்களின் மனதிலிருப்பதை படம் பிடிப்பவை அல்ல. எனவே அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

தலைவர் வரட்டும்... சந்திப்புக்கான சிக்னல் தரட்டும். கூடவே அழுத்தமான ஒரு மெஸேஜும் தரட்டும்... அப்புறம் பாருங்கள் தமிழ்நாட்டு மீடியாவின் உண்மையான முகத்தை!

-சங்கநாதன்


 
45 Comment(s)Views: 4669

Previous Page
Previous
123
govind,abu dhabi
Friday, 26th September 2008 at 03:23:58

இந்த கருத்து கணிப்பின் அவசியம் என்ன?. லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு என்பது யாரால் திணிக்கப்பட்டது, மக்கள் சக்த்தி கொண்ட தலவர்களில் எம்.ஜி.ஆர் க்கு பிறகு நமது தலைவர்தான் இது தமிழகம் அறியும், அதில் பாதி அளவு உள்ளவர்தான் விஜயகாந்த், அக்டோபர் புரட்ச்சி உண்மையானால் தலைவரின் சக்த்தியை இந்தியா உணரும்,தேசிய தலைவர்கள் கூட ராகவேந்திரா மண்டபத்தில் கியூ வில் நிற்பார்கள், ரசிகர்களுக்கு கூட உட்கார இடம் கிடைக்காது,கருத்து கணிப்பு என்றபெயரில் லயோலா கல்லூரி வெளியிட்டது "ஒருவர் கண்ணை கட்டி கொண்டு உலகம் இருண்டுவிட்ட்து என்று கூறுவது போல் உள்ளது",
RAJA,INDIA
Friday, 26th September 2008 at 03:23:42

Loyola surveyed only to 2300 people,our tamilnadu population is 6.5 crores,My opinion is we shouldnt bother this type of surveys.................
rajinijerome,tamilnadutrichy jhonnygroups
Friday, 26th September 2008 at 03:15:52

உன் அசைவிர்குஅர்தம்கான அகிலமெஅமைதிகொல்லும் veli azai thalaivaaaaa kottai yeri kodi naatuvom trichy jhonny groups
T.JAWAHAR,india , tirupur
Friday, 26th September 2008 at 02:56:36

சபாஷ் சரியான பதில். நன்ரி சங்கனாதன் சார்....

jawahar.t

Bharatha priyan,
Friday, 26th September 2008 at 02:53:53

நான் கூட சென்னை கல்லுரிகலை பட்ரி ஒரு கருத்து கன்னீபு நடதலாம் நு பார்கிரென் எந்த கல்லூரி
donation fee,dating la topunu.
Muthala international exposure ku SYLLABUS mathungada appuram karuthu kanipu nadathalam.

Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information