Other Articles
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
(Saturday, 13th September 2008)

அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப செய்யும் தவறு, திரைக் கலைஞர்கள் மீது நடத்தும் அநாவசியத் தாக்கு தல்கள்.

யாரைத் தாக்கினால் எளிதில் விளம்பரமும் பரபரப்பும் தங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்ற சூட்சுமம் புரிந்தவர்கள் இந்த அரசியல் வியாதிகள்.

அந்த விளம்பரம்தான் அதிகார வியாபாரத்துக்கு இவர்கள் போடும் முதலீடு. ஆனால் மக்களோ இதைப்பற்றி யோசிப்பதுகூட இல்லை பல நேரங்களில். தாங்கள் கண்ணால் பார்க்கும் உண்மைகளைக் கூட உணராமல், இந்த போலி அரசியவ்வாதிகளின் பின்னால் போய், நல்ல மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்துகிறார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற உண்மையை இவர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்த்தவர்கள்தான். ஆனால் அதை உணர மறுத்தார்கள், சுயநல மீடியா மற்றும் போலி அரசியல்வாதிகள் போட்ட கூச்சலில் மயங்கி.

பலரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் ரஜினி செய்த ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே எதிர்மறையாக்கி, ஒரு இனத்துக்கே அவரை எதிரியாக்கப் பார்த்தார்கள். இது எத்தனை பெரிய கயமைத்தனம்?

இப்போது மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் பால் தாக்கரே மற்றும் அவரால் வளர்க்கப்பட்ட விஷ விருட்சமான ராஜ் தாக்கரே.

இன்னும் இப்படிப்பட்ட பண்பற்ற தலைவர்களின் பின்னால் லட்சக் கணக்கில் அணிவகுக்கவும், அவர்கள் சொல்லும்போதெல்லாம் போஸ்டர்களைக் கிழிக்கவும், சாணி அடிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.

இந்தியா படித்தவர்கள் நிறைந்த நாடு என்று வெளியில் சொல்லிக் கொள்வதே எத்தனை வெட்கக்கேடான விஷயம்!

பண்பின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம், மக்களாட்சியின் தாயகம் என்று நம்மை நாமே சொறிந்து விட்டுக் கொள்வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா?

விஞ்ஞானமும், நவீனத்துவமும் வளர வளர மக்களிடம் மனிதத்துவம் மறைந்து வக்கிரம் வளர்ந்ததுதான் மிச்சம்!

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும் ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்வதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல... இன்னும் சற்றே மிச்சமிருக்கும் மனிதநேயம் அது!

By Vinojasan


 
10 Comment(s)Views: 3148

Raj T,USA
Thursday, 18th September 2008 at 19:29:57

ரஜினி விளக்கம் தான் கூறினாரே தவிர அது மன்னிப்புமல்ல வருத்தமல்ல... RAJINI HAS GROWN IN OUR RESPECTS MUCH MORE THAN BEFORE BECAUSE, HOW MANY OF US TAKE RESPONSIBILITY OF OUR OWN WORDS AND ACTIONS???????????? Mr.Rajini just for one word has risked everything including his own reputation but the GREATEST THING IS the INTENTION!!!! WOW Mr.Rajini you are just a fantastic person.... Hats off...
Nightingdurai Rajini,India
Tuesday, 16th September 2008 at 06:44:45

என் மனதிலும் ஆழமாக எழுந்த கருத்தும் இதுதான்.. மன்னிப்பு கேட்டார் தமிழனுக்கு எதிராக அல்ல.. காட்டுமிரண்டிதனத்தை மக்களிடம் அரசியல் வாதிகள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு.. மனித குலம் மகத்தானது என்பதை உணர வைக்க... நான் இந்த சமுதாயத்தை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி .. நதி நீரை இணைப்பதால் மட்டுமே இந்த பிரச்னை தீரும் என்று முதலாவதாக ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்னாரே .. எத்தனை பேர் நடை முறைக்கு கொண்டுவர பாடுபட்டனர். ஒரு அரசியல் வாதி கூட இல்லையே .. அதிகாரம், பணம், ஜாதி இது போன்ற வற்றில் ஊறி திளைக்கும் இந்த ஜென்மங்களுக்கு எப்படி மனித இதயம் புரியும்.. காய படுத்த மட்டும் தான் தெரியும், ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல .. என்பதை இவர்கள் தெரிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. ஒரு சில ஜென்மங்கள் இந்த உலகை விட்டு போகும் வரை இந்த நாடகம் நடக்கும்.. அதற்கு பின் என்னவோ திட்டம் இருக்கு என்பதை உலகம் உணர்ந்து கொள்ளும்.
m.mariappan,india/tuticorin
Sunday, 14th September 2008 at 04:44:12

they have no mind for understanding of our thalaivar.
govind,U.A.E, abu dhabi
Saturday, 13th September 2008 at 11:05:05

இந்த வன்முறை கும்பலை தடுக்க அரசு இன்னும் முயற்ச்சி எடுத்தாகதெரியவில்லை,இந்தியாவின் வளார்ச்சிக்கு பெரும் தடையே இந்த கீழ்த்தரமான அரசியல் கட்ச்சிக்களே, இந்த காட்டுமிராண்டிகளை அடக்க எந்த அரசும், நீதி மன்றங்களும் முன்வரவிலை என்றால் நீதி நேர்மை எங்கே என்று மக்கள் தேடி அலையவேண்டியதுதான்,அரசியல் கட்ச்சி என்ற உரிமைகளை பறிக்க நீதி மன்றங்கள் முன் வரவேண்டும், இதில் அரசியல் லாபங்கள் பார்க்கத்தான் அரசியல் கட்ச்சிகள் உள்ளன,கடவுளே இந்த காட்டுமிராண்டிகளுக்கு யார் மணி கட்டுவது,
saravanan,india
Saturday, 13th September 2008 at 10:02:18

corrrest a sonnenga
senthilraj b.e,
Saturday, 13th September 2008 at 06:42:09

உதைக்கனும் என்ற ஒரு சொல்லுக்காக வருத்தம் தெரிவித்து வன்முரைக்கு எதிராக மீண்டும் பிறந்த காந்தி எங்கள் ரஜினிகாந்த், பா.ம.க போன்ற வன்முரைக் கட்சிகள் அவரை எதிர்ப்பதில் வியப்பில்லை.
Perumal PV,India
Saturday, 13th September 2008 at 06:10:38

Its a bad time for India's 2 Big Super Stars. Surely they ll come out of this trouble soon.Lets Pray on behalf of them.
Poova,Qatar, Doha
Saturday, 13th September 2008 at 05:57:48

முற்றிலும் உண்மை.
N.Sridhar,Namakkal
Saturday, 13th September 2008 at 03:51:09

yes , it is super topic, every one should read this topic , every should understand our super star
alagan.rajkumar,india madurai
Saturday, 13th September 2008 at 03:51:05

evarkalai pondra oru sila manitha neya manithargalal than malai peikirathu

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information