Other Articles
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
(Thursday, 11th September 2008)

நான் அரசியலுக்கு வருகிறேன்... தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்... இதோ கொடி தயார்... ரசிகர்களே தொண்டர்களாக மாறத் தயாராகுங்கள்!

-இப்படி ஒரு அறிவிப்பையோ அல்லது இதில் ஏதேனும் ஒரு ஒரு விஷயத்தையோ கூட வெளிப்படையாகப் பேசியதில்லை சூப்பர் ஸ்டார் ரஜினி, இதுவரை.

ஆனால் இப்படியெல்லாம் அவர் இவரிடம் சொன்னார், இன்னாரிடம் கருத்துப் பகிர்ந்து கொண்டார், மனதுக்குள் நினைக்கிறார் என்றுதான் மீடியா உலகம் பரபரப்பாய் எழுதி காசு பார்க்கிறது.

அல்லது, தனக்கு வேண்டப்பட்ட நண்பர் யாரிடமாவது ரஜினி தன் அரசியல் விருப்பங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிப் பேசியிருப்பார். அதைச் சோ போன்ற சிலர் வெளிப்படையாகப் பேசியிருக்கலாம். உடனே அதன் அடிப்படையில் ஆயிரம் கதைகளை எழுதிவிட்டு, பின்னர் ரஜினி அமைதியானதும் அதையே அவருக்கு எதிராகத் திருப்புவதுதான் இதுவரை உள்ள போக்கு.

அப்படியானால் அவருக்கு அரசியல் ஆசை கிடையாதா... அரசியல் பற்றி அவ்வப்போது பேசிவிட்டு அமைதியாகிவிடுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. சமயத்தில் இந்தக் கேள்வி விமர்சனமாய் நீண்டும் விடுகிறது.

அதில் ஒன்று, ‘ரஜினி புதுப் படம் ஆரம்பிக்கும் போதெல்லாம் அவரது அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றன. தனது ரசிகர்களை உசுப்பேற்றி, புதுப்படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்பைக் கிளப்ப இந்த டெக்னிக்கை அவர் உபயோகிக்கிறார். படம் வெளியாகி வெற்றி பெற்றதும் அவர் அதை மறந்து விட்டு, அடுத்த படத்தில் கவனம் செலுத்தப் போய்விடுகிறார்’, என்ற குற்றச்சாட்டு.

கர்நாடகத்தில் சொத்துக்களைக் குவிக்கிறார், வெளிநாட்டில் சொத்து வாங்குகிறார் போன்ற எல்லா பொய்க் குற்றச்சாட்டுக்களையும் விட மோசமான, ஆபத்தான குற்றச்சாட்டு இதுதான்.
அதாவது தனது ரசிகர்களின் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு பணத்தைப் பிடுங்குகிறார் ரஜினி என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை...

ரஜினியை ரசிப்பவர்கள் என்பதையும் தாண்டி நடுநிலையோடு இந்தக் குற்றச்சாட்டில் உள்ள அபத்தத்தை இங்கே வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது.

முதல் முக்கியமான விஷயம்... கடந்த பத்தாண்டுகளாக ரஜினி தனது ரசிகர்களைச் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார். இந்தப் பத்தாண்டுகளில் அவரை நேரில் பார்க்காமலேயே தீவிர ரசிகர்களான டீன் ஏஜ் இளைஞர்கள் பல லட்சம் பேர்.

ரஜினி இவர்களுக்கு என்ன சொல்லி ரசிகர்களாக்கினார்... என் படத்தைப் பார்... தியேட்டர்களில் பாலாபிஷேகம் செய்... நான் அரசியலுக்கு வந்து உனக்கு நன்மை செய்கிறேன் என்றா... இல்லையே!

அட, குறைந்தபட்சம் பொது மேடைகளில்கூட அவர் இப்படியெல்லாம் ரசிகர்களைத் தூண்டும்படி பேசியதில்லையே.

அவர்களுக்கென்று தனி செய்தி எதையும் அவர் அனுப்புவதும் இல்லை. பொதுவில் வைத்து பத்திரிகை மூலம் கொடுப்பதும் இல்லை.

அப்படியெனில் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் என்பது வடிகட்டின பொய்தானே!

அவரது ஒவ்வொரு புதுப்படம் வெளியாவதற்கு முன்பும், அதன் பிறகும் ரஜினியின் அரசியல் பிரவேச செய்திகளை பரபரப்பாக வெளியிடுபவர்கள் பத்திரிகைகள்தான். குசேலன் வெளியீட்டுக்கு முன் அரசியல் பேசவில்லை. ஏன், சந்திரமுகி, சிவாஜி வெளியீடுகளின் போதுகூட அவர் அரசியல் பற்றி எந்தக் கருத்தும் சொல்லவில்லை.

ஆனால் அப்படிப்பட்ட செய்திகளை இவர்களாகவே உருவாக்கினார்கள்.

பல உண்மைகளைப் புரிய வைத்த குசேலன்!

குசேலன் திரைப்படம் பல உண்மைகளை ரசிகர்களுக்குப் புரிய வைத்தது. ரஜினியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உசுப்பேற்றுவது யார், இவர்கள் சொன்ன ஜோசியம் பலிக்காத கோபத்தில் தாறுமாறாக விமர்சனம் எழுதுபவர்கள் யார் என்பதையெல்லாம் ரஜினி ரசிகர்கள் நன்கு புரிந்து கொள்ள இந்தப் படம் உதவியது.

இதோ இப்போதும் அதே வேலையைத்தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரஜினி தன் மன்றத்தினருக்குச் சொன்னதோ அல்லது தளபதி சத்தியநாராயணா மூலம் சொன்னதோ நமது மன்றத்தின் தனிப்பட்ட சமாச்சாரங்கள். அதற்கு ஒரு வர்ணம் பூச வேண்டிய அவசியம் இன்னும் வரவில்லை.

இன்னும் கருவாகாத ஒரு விஷயத்தை வரிந்து கட்டிக் கொண்டு உண்மை போலவே எழுதி எழுதி ரசிகர்களையும், நடுநிலையாளர்களையும் உசுப்பேற்ற வேண்டியது... பின்னர் அப்படி நடக்காத போது, எங்கே மக்கள் நமக்கு எதிராகத் திரும்பி விடுவார்களோ என்ற பயத்தில் பழியை ரஜினி மீதே போட வேண்டியது.

நல்ல பத்திரிகை தர்மம்...

நம்மைப் பொறுத்தவரை, தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவதை எந்த நிர்ப்பந்தமும் இன்றி அவரே விரும்பி அறிவிக்கும்போது ஏற்றுக் கொள்வோம். அவருக்காக எதையும் செய்யும் தொண்டர்களாக மாறுவோம்.

அதுவரை அந்த மிகச்சிறந்த அந்தக் கலைஞரை, பன்முகத் திறமை கொண்ட, மனிதாபிமிக்க மனிதரை ரசிப்போம்!

-சங்கநாதன்






 
21 Comment(s)Views: 5037

12Next Page
Next
menan,tamilnadu/sethiyathope
Saturday, 27th September 2008 at 05:39:37

fantastic comment.100% true words
VIJAYENDRA,INDIA, BANGALORE
Wednesday, 24th September 2008 at 01:24:09

IAM NOT SATISFIED WITH THE KUSELAN BECAUSE WHAT THE SUPERSTAR HAS SAID IN THE FILM IS SHOWS SOMETHING IRRESPONSIBILITY ANSWER BECAUSE THE SUNDARAJAN ASKS THE QUESTION ON BEHALF OF THE FANS SO RAJINI TELLS SOMETHING IRESPONSIBLE SO WHY THEN WE FANS ARE EXPECTING HIM TO COME FOR POLITICS PLEASE THINK OVER IT. KICK THE BLOODY DIRECTOR P.VASU WHO HAS CREATED SUCH SCENES AND DAILOUGUE IN THE FILM SO SUPERSTAR HAS REGRET FOR THAT
Raj T,USA
Thursday, 18th September 2008 at 19:33:40

ரஜினி விளக்கம் தான் கூறினாரே தவிர அது மன்னிப்புமல்ல வருத்தமல்ல... RAJINI HAS GROWN IN OUR RESPECTS MUCH MORE THAN BEFORE BECAUSE, HOW MANY OF US TAKE RESPONSIBILITY OF OUR OWN WORDS AND ACTIONS???????????? Mr.Rajini just for one word has risked everything including his own reputation but the GREATEST THING IS the INTENTION!!!! WOW Mr.Rajini you are just a fantastic person. YOU JUST TAUGHT US ONE MORE THING " ACCOUNTABILITY" Thanks Mr.Rajini.
M.Rajesh,chennai
Tuesday, 16th September 2008 at 01:31:09

We all are 28 members below 35 years. Last 20 years we are in thalivars association. we expect that he will sure come to politics and will be a good guidence for us.
Govinda,USA
Saturday, 13th September 2008 at 11:10:11

1. தமிழனுக்காக கழுமரம் ஏறுவேன் என்ற க.க! இங்க‌ எத்த‌ன‌பேருக்கு க‌ழும‌ர‌ம் என்றால் என்ன‌வென்று தெரியும்!? ஒரு மியூசிய‌த்திலியாவ‌து பார்த்த‌துண்டா?

2. இன்த‌ டி.ராஜென்த‌ர், ச‌ர‌த்குமார், ச‌த்திய‌ராஜி, சீமான் இவ‌ங்கெல்லாம் த‌மிழ்த்திரைப்ப‌ட‌த்துறைக்கோ அல்ல‌து த‌மிழுக்கோ அல்ல‌து த‌மிழ‌ர்க‌ளுக்கோ செய்த‌து என்ன‌?

3. தேச‌ப்பிதா காந்திய‌டிக‌ளைப்ப‌ற்றி சொல்லும் போது 'Gandhi showed a way out of the madness' அப்பேர்ப‌ட்ட‌ ம‌கானின் அகிம்சை கொள்கையை விம‌ர்சித்த‌ சொத்தைராஜ் ஒரு ம‌னித‌ பிற‌வியா? அவ‌ன் இந்திய‌னா? த‌மிழ‌னா? அந்த‌ மாதிரி ஒரு கெண‌க்கூவுக்கு ( அவன் பயன் படுத்திய அதே வார்த்தை) இங்க‌ சில‌ர் வ‌க்கால‌த்து வாங்குவ‌து ஆச்ச‌ர்ய‌ம்தான்!

chandrasekar,india/tamilnadu
Saturday, 13th September 2008 at 06:49:17

true true true true i want this to show all over world ,
naveen kodambakkam,india, chennai.
Saturday, 13th September 2008 at 00:45:58

எஙக தலைவர் எப்ப வருவாருனு அவருக்கு தெரியும் அவரா சொல்லும்பொடு நாஙக கெப்பொம் அடுவரைகும் சும்ம இருஙட கொலபம் புடிச்ச பட்திரிகை பொய்யர்கலா
Raj T,USA
Friday, 12th September 2008 at 16:54:35

அருமையான பதிவு! சரியான செருப்படி!! மானங்கெட்ட பத்திரிகைகள்! தவறில்லை ஏனெனில் அது இந்த (PSEUDO) போலித்தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த குமுதத்தில் வாந்த்தியெடுக்கும் கெ.பு.ம‌, நா.கு.ம‌, தெ.ம, எ.பொ.ம‌, க.ஒ.பி. எ.க.நா.ம‌ என்கிற கேனை ஒரு பதிவு போடுங்களென். அந்த ஈனப்பிறவிய தமிழ் அகராதியிலிருந்து ( அல்லது இல்லாத) எந்த கெட்ட வார்த்தைய சொல்லி திட்டினாலும் அது குறைவாகத்தான் இருக்கும்.
Raj T,USA
Friday, 12th September 2008 at 16:39:49

அருமையான பதிவு! சரியான செருப்படி!! மானங்கெட்ட பத்திரிகைகள்! தலைப்பை "கொடிகட்டிப் பறக்கிறது தமிழ் பத்திரிகைகளின் நியாயம்! என்று மாற்றினால் இன்னும் பொருத்தமாக உருக்கும். இப்படியே இருந்தாலும் தவறில்லை ஏனெனில் அது இந்த (PSEUDO) போலித்தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த குமுதத்தில் வாந்த்தியெடுக்கும் கெ.பு.ம‌, நா.கு.ம‌, தெ.ம, எ.பொ.ம‌, க.ஒ.பி. எ.க.நா.ம‌ என்கிற கேனை ஒரு பதிவு போடுங்களென். அந்த ஈனப்பிறவிய தமிழ் அகராதியிலிருந்து ( அல்லது இல்லாத) எந்த கெட்ட வார்த்தைய சொல்லி திட்டினாலும் அது குறைவாகத்தான் இருக்கும்.
senthil kumar,singapore
Friday, 12th September 2008 at 13:18:01

SIMPLY SUPERB
Thinakar,
Friday, 12th September 2008 at 07:12:56

மிகவும் சரியாக சொன்னீர்கள். ரஜினியை நேசிக்கும் உண்மையான ரசிகர்களின் எண்ணத்தை தெளிவாக தெரியபடுத்துள்ளிர்கள். அருமையான பதிவு. அன்புடன் தினகர் குறிப்பு: சங்கநாதனின் இன்னொரு பெயர் ராம்கி யா?. விருப்ப பட்டால் எனது மெயிலில் தெரிவியுங்கள்.

--------------------------------------

Thinakar,

Sanganathan is not Ramki

Sanganathan is our Special Reporter :)

Thanks

Nattu

--------------------------------------

govind,U.A.E-ABU DHABI
Friday, 12th September 2008 at 06:10:22

சாதியயுண‌ர்வு,மத உணர்வு இல்லை மனிதனாக அனைவரையும் ஓன்றினைத்த மாமனிதன், உழைப்பால் மனதால் உயர்ந்தவர், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவ்ருக்கு, மீடியாக்கள் தலைவரின் இமேஜையும் புகழையும் குறைக்க முயர்ச்சி செய்தும் தோற்று போனவர்கள் வேறுவழியில்லாமல் திரும்பவவும் புகழ்பாட ஆரம்பித்துள்ளன், உண்மையான‌ மக்கள் சக்த்திய்ள்ள த‌லைவர், கர்மவீரர் காமராஜருக்கு பின் உண்மை, உழைப்பு மக்கள் உணர்வு, உள்ள தலைவன் "ரஜினி" அவர்கள் மட்டுமே, "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற வார்த்தை வெறும் வயிற்றுபிழைப்புக்காக இல்லாமல் தமிழனுக்காக விளம்பரம் இல்லாமல் சேவை செய்யும் உண்மையான தமிழ்யுண்ர்வு கொண்ட மனிதன், பிரச்சினை என்று வந்தபோது ஓடி ஒளிந்த நண்பர்களை எல்லாரையும், இன்றும் என்றும் இவர்கள்தான் என் ந்ண்பர்கள் என்று கூறும் மனது யாருக்கு வ‌ரும் நம் தலைவரை தவிர, 10வருடங்களுக்கு முன்பே அரவியலுக்கு வரவேண்டியவர் இன்னும் அமைதி காக்கிறார்,எதனால் என்பது நமக்கு தெறியாது ஆண்டவனுக்கு வெளிச்சம், அவர் மணதுக்கு நம் கீழ்தரமாண அரசியல்(சாதியயுணர்வு,மத உணர்வு,காலை வாருதல், உண்மையை பேச ம‌றுத்தல்,கட்ச்சி மாறுதல்)பிடிக்கவில்லை என்று தோனுகிறது, இக் கலி காலத்தில் நல்லவ‌ர்களுக்கு காலம் இல்லை, தலைவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தற்பொழுது உள்ள அரசியல் நிலமை மாறும்,
m.mariappan,india/tuticorin
Friday, 12th September 2008 at 05:07:11

Dear Thailaiva

You don't like politics always. Everybody known that. But if you will come politics it will going to honest. public will give response to politics.

After 1996 total tamil nadu is expecting to you.
you should come to politics and you should announce party name and Flag name

dkarthikeyan,india - chennai
Friday, 12th September 2008 at 00:08:19

100% correct .Thank You very munch.Please send that copy to all magazine.If magazine are true they will
Publishes.But one thing rajini enter politics it good.We are got one Gandhi on 1947.coming 2010 we got one more same like that Gandhi(new TN C.M).

shanmugam,Bangalore
Thursday, 11th September 2008 at 23:52:41

Please Post it in English...
boopathi,bangalore
Thursday, 11th September 2008 at 23:14:58

very very true 100% we agree with your view. Its a nice article
Rajini Rasikan,India/chennai
Thursday, 11th September 2008 at 22:44:18

Fantastic!!!!
Anonymous,
Thursday, 11th September 2008 at 21:57:40

right message at right time cool
veejay,US / Burlington, MA
Thursday, 11th September 2008 at 19:19:22

One of the precise n nice analysis. We will stand by our Thalaivar whether he comes to politics or not. Personally I feel that politics has become so filthy that deceny has no place. There are these full time so called politicians who may say derogatory comments about our Thalaivar which we cannot stand. Also, people are not in the mindset to receive a true leader.. they want only fake people n want only free TV n other things n do not want to work. This will not be acceptable for Thalaivar. One thing I would say is that.. Thalaivar must meet his fans often n make them happy. Long Live Thalaivar.
Raj T,USA
Thursday, 11th September 2008 at 17:50:17

I have to say this. rajinifans.com TEAM, you guys are mind readers.. THIS ARTICLE IS TRUTH NOTHING BUT TRUTH! A 100% TRUTH!! Just Fantastic! The best ever balanced, realitic, truthful article ever I Read about Rajini the artist and superstar in ages. Very Many thanks to the team or who ever wrote this. IT READS OUT THE MINDSET OF A TRUE RAJINI FAN. Thanks
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information