Related Articles
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
Enthiran - Tamil, English and Telugu First Paper Advertisement
The first look with EXCLUSIVE details..
எந்திரன் - தி ரோபோ - ஒரு முதல் பார்வை!
ரஜினியும் கர்நாடக சொத்துக்களும்!
Our Thalaivar is not going to play any match
Leading magazines started praising our thalaivar...
அக்டோபரில் தலைவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதும் உண்மைதானாம்
Kumudam - "Rajini is an Era in Indian Cinema!"
ரஜினி டார்கெட், இனி உலக மார்க்கெட்
நிறைய கெடுதல்களுக்கு நடுவிலும் இந்த ஒரு நல்ல செய்தியைத் தந்த குமுதத்துக்கு சொல்வோம், நன்றி
Kuselan Cinema Song - Modified
Superstar's Robo is named as "Enthiram"
பாபா குசேலன் இந்த இரு படங்களுமே கடும் பாதிப்புகளுக்குள்ளாயின
Amicable settlement in Kuselan issue; Exhibitors hail our Thalaivar

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
(Wednesday, 10th September 2008)

 


ஏற்கெனவே கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளிலும் நாம் சொன்ன விஷயம்தான்.
நமது அன்புத் தலைவரின் இமேஜை லேசாக அசைத்துப் பார்த்துவிடும் நப்பாசையுடனும், அவரது அர்த்தமுள்ள அருமையான படமான குசேலன் பற்றியும் திரையுலகில் உள்ள சில விஷமிகளும், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மீடிய உலகமும் என்னென்னமோ செய்து பார்த்து விட்டன.

ஆனால் அத்தகைய எதிர்மறைச் செய்திகள் கணக்கில்லாமல் வந்த இந்த ஒரு மாத காலத்தில்தான் தலைவரின் தங்க மனசு ஒவ்வொரு தமிழருக்கும் புரிந்தது. முன்னிலும் பலமடங்கு அவரது புகழ் உயரத் துவங்கியுள்ளது.

இதுவரை தமிழ் சூப்பர் ஸ்டார் என்று எழுதி வந்த வட இந்தியப் பத்திரிகைகள் இப்போது, இந்திய சூப்பர் ஸ்டார் என்றும், சில இன்டர்நேஷனல் சூப்பர்ஸ்டார் என்றும் அடைமொழி கொடுத்து எழுத ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக தலைவரின் எந்திரன் – தி ரோபோ டிசைன்கள் வெளியாகி, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில் எங்கெங்கு காணினும் ரஜினி ரஜினி ரஜினி... என்ற நிலை. எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் ரஜினிதான். டைம்ஸ் குரூப், தலைவர் பற்றிய பொய்ச் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் (மதுரை) போன்றவற்றின் வெளியீடுகளில் மீண்டும் ரஜினி புகழ் பாடும் அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் தலைவர் அக்டோபரில் புதுக்கட்சி ஆரம்பிப்பதாக தினமலர் ஒரு திரி பற்ற வைத்தது. அதன் பின்னணி, நடந்தது என்ன என்பது குறித்தெல்லாம் நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இப்போது குமுதம் ரிப்போர்ட்டர்.

சில தினங்களுக்கு முன்பு, தலவைருக்கு அவரது மகள் அட்வைஸ் பண்ணியதாக உளறிக் கொட்டியிருந்தார்கள். யார் சொல்வதையும் கேட்டு முடிவெடுப்பவர் அல்ல சூப்பர் ஸ்டார். அப்படி அவர் எடுத்திருந்தால் இந்நேரம் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக இருந்திருப்பார். கூடவே பல சதிகளும் அரங்கேறியிருக்கும்.

ஆனால் அப்போதும் தன் சொந்த முடிவைத்தான் தலைவர் எடுத்தார். எதற்கும் மயங்கிவிடாத உறுதி அவருக்குண்டு என்பதற்காக இதைச் சொல்கிறாம்..

இன்றைய ரிப்போர்ட்டரில், கேரள ஜோதிடர்களைக் கூட்டி வந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினி ஆரூடம் பார்த்து, கொடியை அறிவிக்க நாள் குறித்துவிட்டார் என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். மூன்று கொடிகள் தயாராக இருப்பதாகவும், எந்திரன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் அக்டோபரில் கொடி அறிவிப்பு என்றும் கூறியுள்ளனர்.
மீண்டும் சொல்கிறோம்... மீடியாவின் இந்தப் புதிய வேஷம் கண்டு நாம் ஏமாந்துவிட வேண்டாம். தலைவரின் முடிவுகளும் உத்தரவுகளும் நமக்கு நேரடியாகவே வரும். இவர்கள் நமது தபால்காரர்களும் அல்ல...

தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்!

Sanganathan
for www.rajinifans.com


 
22 Comment(s)Views: 3627

Previous Page
Previous
12
Anonymous,
Wednesday, 10th September 2008 at 02:16:16

Mr.sanganathan
I am unable to understand the cramble and gamble of our media and magazines.They do not have any moral rights to wirte about our thalaivar in whatever way they like it.Reviews should be on
the performances and not on the personnel.Atleast once we should go legally incase of any false and misleading news.Is it possible?Then only we can curtail these filthy activities to some extent.Thanks

Ram H,Norway
Wednesday, 10th September 2008 at 02:10:21

Good one !
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information