This sure is a great moment for all of us. The tamil radio channel 'Ungal Sakthi FM' is a dear to all tamil community of UAE. This is the first time ever such a special programme is done to celebrate a cine personality. Kindly remember last year too we did that and the same was uploaded in our site. So this is the second time we have done it again. The main reason is the amount of positive responses the channel received on account of our last year program.
We thought of naming few friends without whom this program wouldn't be that great sucess. Abu, Ramki, Sundar, Dharma, Deepa, Gopi, Jagan, swami, sharmili, basha, sheikh, chelladurai, and others. Everyone contributed to the sucess of the program.
Special thanks have been submitted to Mr. Asokan, M.D and Mr.Ram Victor the RJ from 'Ungal sakthi FM'
Program was packaged crisply with a Quiz on Rajni, rare details on Rajni, listeners phone call and their feelings towards our Thalaivar, audio clips of Rajni's film dialogues, music and others. The program carried a very elobarate introduction of what is rajinifans.com, our activities, our vision, and other details.
It created lot of interest in the listeners and we got more than 100 calls in the same day. Most of the callers expressed their love for Rajni and appreciated our site activities. Many volunteered to be a part of the activities we do.
Thanks
Lawrance Prabakar, Dubai
ரஜினிபேன்ஸ்.காம் - துபாயின் உங்கள் சக்தி எப்எம் கூட்டணி இந்த முறையும் ரஜினியின் ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் தேதியன்று ரஜினியின் பிறந்த நாளை ஓட்டி உலகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் பரவியிருக்கும் வளைகுடா நாடுகளிலும் ரஜினியின் பிறந்த நாளன்று உள்ளுர் வானொலி, பத்திரிக்கைகளில் சிறப்பு கொண்டாட்டங்கள் இடம் பெற்றிருக்கும். வளைகுடா தமிழர்கள் விரும்பி கேட்கும் துபாயின் உங்கள் சக்தி எப்எம் இந்த ஆண்டும் ரஜினிபேன்ஸ்,காம் இணையத்தளத்துடன் இணைந்து மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.
டிசம்பர் 12 அன்று நாள் முழுவதும் சூப்பர் ஸ்டார் நடித்த பாடல்கள், வசனங்கள் ஒலிபரப்பாயின. சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துச்சொல்ல ரசிகர்கள் வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் ரஜினி படங்களுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் வளைகுடா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாமல் சென்னையிலிருந்து முக்கிய பிரமுகர்களும், ரஜினி ரசிகர்களும் பங்கேற்று ரஜினிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்கள்.
முழு ஒலிபரப்பும் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் ரஜினி ரசிகர்களுக்காக பிரத்யேகமாக இங்கே வலையேற்றப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உங்கள் சக்தி எப்எம்முடன் இணைந்து ரஜினிபேன்ஸ்.காம் துபாய் டீம் ஏற்பாடு செய்திருந்தது, தீபா, கோபி, அபுதாகீர், லாரன்ஸ் பிரபாகர் உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
வளைகுடா வாழ் தமிழர்கள் மத்தியிலும் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த துபாய் குழுவிற்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
|