27 ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான பில்லா படம் திரும்பவும் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருப்பது தெரிந்த விஷயமே. சூப்பர் ஸ்டாரின் பில்லா அளவுக்கு படத்தின் ரிசல் இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றிருப்பதால் சூப்பர் ஸ்டாரின் ஆசிகளுக்கும் உரித்தாகியிருக்கிறது. சென்ற வாரம் சூப்பர் ஸ்டாருக்கென்று பிரத்யேகமாக திரையிட்டார். படத்தை பார்த்த சூப்பர் ஸ்டாரும் அஜித்குமார், இயக்குநர் விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார். பில்லாவின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டாரின் படங்கள் ரீமேக் செய்யப்பட இருக்கின்றன. அனைத்து வெற்றி அடைவதற்கு நம்முடைய வாழ்த்துக்கள்.
|