லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அனைத்து மாட்டங்களிலும் ரஜினி ரசிகர்கள் பல்வேறு விதமாக வேட்டையன் பட ரிலீசை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி உள்ள திரையரங்கில், வேட்டையன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு சமாதான புறாவை பறக்கவிட்டும், கற்பூர சூடம் ஏற்றியும், ரஜினி கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் வேட்டையன் ரிலீஸை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.
Celebrities
Tamil Nadu
Other Parts of India
Overseas
|