அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். தமன்னா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான கதை விவாத உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தன.
அந்த வேலைகளை முடித்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் இரண்டு வாரம் தள்ளி சென்றது. இந்த நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் ரஜினிகாந்த் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்கிடையே ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் இன்று (22 Aug) காலை 11 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்ததது. அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினியின் ஜெயிலர் பட தோற்றத்தைப் பகிர்ந்து, ’ஜெயிலர் இன்று தனது ஆக்ஷனை தொடங்குகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.
அந்தப் படத்தை தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
|