Related Articles
Hugo Barra, Vice President, Xiaomi Global explaiins on Thalaiva mobile theme
ரஜினியிடம் ஒரே ஒரு கேள்வி - கிரேசி மோகன்
Educatiional help by Rajinikanth fans at Himalaya village school
Superstar Rajinikanth at Shamitabh music launch
சிங்காரவேலன் என்னும் மீடியேட்டரின் முகத்திரையை கிழித்த பத்திரிக்கையாளர்
லிங்கா படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்
திருடர்களுக்கு துணை போகும் சீமான் அன்ட் கோ!
கேபி.. என் வழிகாட்டி… தந்தை! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதிய உருக்கமான கட்டுரை
Rajinikanth at his Guru K Balachander 13th day Ceremony
2014… அதிக வசூல் குவித்த டாப் 5 படங்களில் லிங்கா, கோச்சடையான்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சிங்கப்பூரில் பட்டையைக் கிளப்பிய தலைவர் படங்கள்
(Friday, 6th February 2015)

தலைவர் படங்களுக்கு உலகம் முழுக்க தற்போது வரவேற்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழ் மொழி தெரியாத ஜப்பான் நாட்டில் முத்து படம் பெற்ற வெற்றியும் அதன் பிறகு அங்குள்ள ரசிகர்கள் தமிழ் கற்றுக்கொண்டதையும் நாம் அறிவோம். இதெல்லாம் தெரிந்த செய்திகள் ஆனால், தமிழர்களை அதிகம் கொண்டுள்ள தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ள சிங்கப்பூரில் அந்தக் காலத்திலேயே நம் தலைவர் படம் பட்டையக் கிளப்பியதையும், அப்போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள். தலைவரின் சாதனைகள் பெருமைகள் குறித்து நாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அட! இவ்வளோ விசயம் இருக்கிறது.. இதெல்லாம் நமக்கு தெரியாமல் போய் விட்டதே! என்று நினைக்கும் அளவிற்கு சிங்கப்பூரில் நடந்த பல சுவையான செய்திகள் உள்ளது.

அந்தக் காலத்தில் வெளியான பில்லா, தீ, ஆறிலிருந்து அறுபது வரை, 16 வயதினிலே, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் சக்கைப் போடு போட்ட படங்கள்.  1978 ஆண்டு வெளியான பைரவி படத்தின் விளம்பரத்தில் அப்படத்தின் விநியோகஸ்தர் "கலைப்புலி தாணு" அவர்கள் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்று விளம்பரம் செய்ததையும் அதை ரஜினி மறுத்ததையும் பின்னர் அதையும் மீறி தாணு, சூப்பர் ஸ்டார் என்று விளம்பரம் செய்ததையும் பின்னர் அதுவே நிலைத்தையும் அனைவரும் அறிந்து இருப்பீர்கள். 1979 ம் ஆண்டு வெளியான ஆறிலிருந்து அறுபது வரை படத்தின் சிங்கப்பூர் விளம்பரங்களில் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஆச்சர்யமாகவும் விரைவில் சிங்கப்பூர் வரை பிரபலமானதும் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.

1980 ல் பில்லா படம் வெளியான போது இரண்டு திரையரங்கங்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்து இருக்கிறது. படம் பார்க்க வரும் அனைவருக்கும் தலைவரின் கையெழுத்து இட்ட காலண்டர் இலவசமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே சும்மா ஜிவ்வ்ன்னு இருக்கே! :-) அந்தக்காலத்தில் இது போல கொண்டாட்டங்களுடன் பார்த்தவர்களை நினைத்து கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.

1989 ம் ஆண்டு வெளியான தலைவரோட ஹாலிவுட் படம் "Blood Stone" பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். நம்ம ஊரில் வெளியாகி தலைவர் முழு நீள ஆங்கிலப்படத்தில் பேசி நடித்து சண்டை போட்டதே நமக்கு ஆச்சர்யம் என்று இருக்கும் போது அந்தப்படம் சிங்கப்பூரில் Raja, New Crown, Clementi  ஆகிய மூன்று திரையரங்கங்களில் ஷிஃப்ட் முறையில் ஓடியது பெரிய விசயமல்லவா! இதை விட விளம்பரத்தில் Indian Action Star Rajinikanth என்று விளம்பரம் இருந்ததைப் பார்க்கும் போது தலைவர் தூள் கிளப்பி இருக்கிறார் என்று உற்சாகமாகி விட்டது :-) . இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது தமிழ் ரசிகர்கள் விசிலடித்து படம் பார்த்ததை, சிங்கப்பூரின் மற்ற மொழிக் காரர்களான சீனர்களும் மலாய் இனத்தவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து இருக்கிறார்கள். 

அண்ணாமலை ஒரு நாள் முன்னதாகவே சிங்கப்பூரில் இரவு 9 மணிக் காட்சியாக வெளியாகி விட்டது. ஏற்கனவே தளபதி, மன்னன் போன்ற படங்கள் பட்டையக் கிளப்பிய உற்சாகத்தில் இருந்த தலைவர் ரசிகர்கள் அண்ணாமலைக்கு பெருத்த வரவேற்பு கொடுத்தனர். இந்தப் படத்திற்கு விசிலடித்துக் கொண்டாடியதைப் பார்த்து இங்குள்ள சிங்கப்பூரர்கள் ஆச்சர்யமடைந்தனர். தற்போது இவையெல்லாம் சர்வ சாதாரணம் எனும் படி ஆகி விட்டது. 

கவிதா வீடியோஸ் கல்லாங் MRTஅருகே New Happy தியேட்டரில் "தளபதி" படத்தை வெளியிட்டது ஆனால், படம் நன்றாக இருந்தும் திரையரங்க பராமரிப்பு காரணமாக இங்கே செல்ல பார்வையாளர்கள் தயங்கினார்கள். பின்னர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து Hoover திரையரங்கில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றிகரமாக தொடர்ந்து ஓடியது. சிறிது நாட்களிலேயே மன்னன் வெளியாகியது.

தீபாவளி வெளியீட்டில் பாண்டியன் படத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது ஆனால், பாண்டியன் படத்தை விட கமலின் "தேவர் மகன்" சிறப்பாக வந்து இருந்ததால், இந்தப் படம் அனைவரின் கவனத்தையும் பெற்று பெரிய வெற்றிப் படமாகியது.

1994 ம் ஆண்டில் 800 இருக்கைகள் கொண்ட கோல்டன் சுல்தான் திரையரங்கம் தமிழ் திரைப்படங்களை வெளியிட துவங்கியது ஆனால், எந்தப் படமும் முழுவதும் நிறையவில்லை 1995 பாட்ஷா வெளியாகும் வரை. சிங்கப்பூரில் பிரபலமான செய்தித்தாளான Straits Times பாட்ஷா படத்தைப் பற்றி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டில் வெளியான முத்து படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அரங்கத்தில் அனைவரும் சத்தம் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், இடையே ஸ்லைடு போட்டு சத்தம் போடாமல் அமைதியாகப் பார்க்கும் படியும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அருணாச்சலம் படமும் 40 நாட்களுக்கு மேல் ஓடியது. இங்கே முதல் முறையாக Black ல் டிக்கெட் விற்கப்பட்டது. பின்னர் காவல்துறையினரால் தடுக்கப்பட்டது. இது போல நடந்த சம்பவம் முதலும் கடைசியும் இது தான்.

1999 ம் ஆண்டு 1200 இருக்கைகளைக் கொண்ட பிளாசா திரையரங்கம் திறக்கப்பட்டது "படையப்பா" படத்துடன் :-) . சும்மா அதிரடியாக இருந்து இருக்கும்! முதல் படமே தாறுமாறான வெற்றி என்றால் யாருக்குத் தான் சந்தோசம் இருக்காது. அருகில் இருந்த கோல்டன் சுல்தான் திரையரங்கிலும் படையப்பா படம் வெளியாகி இருந்தது. இதிலும் இந்தத் திரையரங்கமும் கூடுதல் இருக்கைகளைக் கொண்ட திரையரங்கம். படையப்பா தான் முதன் முதலாக ஆறு திரையரங்குகளில் வெளியாகி, 40 நாட்களுக்கு மேல் ஓடியது. தலைவர் அப்பவே திரையரங்க எண்ணிக்கை சாதனையை வெளிநாடுகளில் ஆரம்பித்து வைத்துட்டாரப்பா! :-)

தலைவரின் தோல்விப் படங்களில் ஒன்றான "பாபா" 3 திரையரங்களில் வெளியாகி 50 நாட்கள் ஓடியது. இதனுடைய டிக்கெட் கட்டணங்கள் அப்போதே 15$ விலையிலும் இவற்றை பிரபல வணிக வளாகமான முஸ்தஃபா மற்றும் உணவகங்களில் விற்பனை செய்து இருக்கிறார்கள்.  தற்போது 2014 ல் லிங்கா படத்திற்கு அதிகபட்சமாக முதன் முதலில் 18$ டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பாபா படத்திற்கு தலைவரின் படத்தை டிக்கெட்டில் அச்சடித்து இருந்தார்கள். இது போல சிங்கப்பூரில் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

தலைவரின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றான "சந்திரமுகி" ஒரு நாள் முன்னதாகவே இங்கே 15$ கட்டணத்துடன் வெளியாகி சிங்கப்பூரிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 நாட்கள் ஓடியது. இந்த 100 வது நாள் விளம்பரத்தை நீங்கள் தற்போது படித்துக்கொண்டு இருக்கும், தலைவர் ரசிகர்களின் பெருமைக்குரிய தளமான, நடிகர்களுக்கு என்று முதன் முதலாக இணையத்தில் துவங்கிய தளமான ரஜினிஃபான்ஸ்.காம் தளம் தமிழ்முரசு செய்தித்தாளில் விளம்பரப்படுத்தியது.

இதன் பிறகு சிவாஜி திரைப்படம் தான் தலைவர் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படமாக இன்றும் [2015] திகழ்கிறது. 145 நாட்கள் இத்திரைப்படம் ஓடியது. 

சிவாஜிக்கு முன்பதிவிற்காக நின்ற அசரவைக்கும் கூட்டம் 

இதன் பிறகு வெளியான படம் "குசேலன்" குறிப்பிடத்தக்க அளவில் ஓடிய படம். குசேலன் தான் நான் சிங்கப்பூரில் பார்த்த முதல் தலைவர் படம். கோல்டன் வில்லேஜ் ஈஷூன் திரையரங்கில் நான் என் அம்மாவுடன் சென்று பார்த்தேன். இதற்கு டிக்கெட் வாங்க அனுமார் வால் போல வரிசை நீண்டு இருந்தது. வேறு படங்கள் பார்க்க வந்தவர்கள் எதற்கு இவ்வளவு கூட்டம்? என்று ஆச்சர்யமாகப் பார்த்துச் சென்றது நினைவில் இருக்கிறது.

இதன் பிறகு வெளியான எந்திரன் சிங்கப்பூரில் பெரிய வெற்றிப் படமானது. நண்பர்கள் அனைவரும் எந்தத் திரையரங்கம் முதலில் வெளியிடுகிறார்களோ அதில் பார்க்கலாம் என்று முடிவு செய்து  லேவண்டர் அருகே உள்ள கடற்கரை சாலை கோல்டன் திரையரங்கில் பார்த்தோம். முதல் 10 நிமிடங்கள் ஒன்றுமே புரியாத அளவிற்கு ரசிகர்களின் கூச்சல் இருந்தது. பூக்கள் காகிதம் என்று தமிழ்நாட்டில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல அதிரடியாக இருந்தது. குசேலன் படத்தின் தோல்வியால் துவண்டு இருந்த ரசிகர்கள் எந்திரன் படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்து இருந்தார்கள். இந்தப் படத்திற்கு முன்பதிவு ஆரம்பித்த போது கோல்டன் வில்லேஜ் இணையத்தளம் திணறி கொஞ்ச நேரம் வேலையே செய்யவில்லை, ரசிகர்கள் கூட்டத்தால் முடங்கியது இதுவே முதல் முறை. எந்திரன் 11 திரையரங்குகள் வெளியிடப்பட்டதே அப்போதைய தேதிக்கு அதிகபட்ச திரையரங்குகளாகும் (தற்போது 2015 லிங்கா 18). உள்ளூர் வசந்தம் தொலைக்காட்சியில் இருந்து வந்து ரசிகர்களைப் பேட்டி எடுத்தார்கள். இந்தப் படத்தின் 100 வது நாள் காட்சியை நண்பர்கள் அனைவரும் இணைந்து ரெக்ஸ் திரையரங்கில் பார்த்தோம்.

இதன் பிறகு தலைவர் உடல்நலம் குன்றி உடல்நிலை சரியான பிறகு வெளிவந்த "கோச்சடையான்" மோசன் கேப்சரிங் படம் என்பதால் பலருக்கு படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டது. மே 9 ம் தேதி வெளியிடுவதாக அறிவித்ததால் முன்பதிவு துவங்கி டிக்கெட்டும் விநியோகம் செய்யப்பட்டு விட்டது. பின்னர் இறுதியில் பல்வேறு காரணங்களால் படம் மே 23 ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டதால் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலர் அதிருப்தி அடைந்தனர். முதன் முதலாக தலைவர் படம் சொன்ன தேதியில் வெளியாகாமல் இறுதி நேரத்தில் மாற்றப்பட்டது "கோச்சடையான்" படம் மட்டுமே!

இதன் பிறகு படம் வெளியாகி வசூலை எடுத்தாலும் மற்ற தலைவர் படங்களைப் போல பெரிய வெற்றியைப் பெறவில்லை. பலர் படம் தோல்வி அடைந்து விடுமோ என்று நினைத்த நேரத்தில் படத்திற்கு தலைவரின் குரலும், இயக்குநர் ரவிக்குமார் அவர்களின் சிறப்பான திரைக்கதையும், ரகுமானின் அற்புதமான பின்னணி இசையும் பாடல்களும் படத்தை வெற்றி பெறச் செய்தன. இரண்டாம் பாதி பலரையும் கவர்ந்தது. முதலில் இந்தப் படத்திற்கு NC 16 என்ற 16 வயதினருக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படமாக சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது பின்னர் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தலை துண்டிக்கப்படும் காட்சி நீக்கப்பட்டு PG 13 சான்றிதழ் வழங்கப்பட்டது. உள்ளூர் வசந்தம் தொலைக்காட்சியில் இருந்து வந்து ரசிகர்களைப் பேட்டி எடுத்தார்கள்.

பின்னர் அதே 2104 ஆண்டு ஆரம்பித்து தலைவர் பிறந்தநாளில் வெளியான "லிங்கா" க்கு ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பு காணப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு நேரடி தலைவர்  படம் என்பதால், பெரும் வரவேற்பு காணப்பட்டது. டிக்கெட் கொடுப்பதில் கடைசிவரை இழுபறியாகவே இருந்ததால், எந்தத் திரையரங்கில் வெளியாகிறது? முந்தைய நாளே வெளியாகுமா? என்பது போன்ற பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக ரெக்ஸ் திரையரங்கில் இரவு 12 மணிக்கு முதல் காட்சியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த சமயத்தில் WhatsApp பிரபலமாகி இருந்ததால், டிக்கெட்டுகளுக்காக பல WhatsApp Group உருவாக்கப்பட்டு டிக்கெட் குறித்த செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டு இருந்தன. எந்திரன் படத்தின் திரையரங்க எண்ணிக்கையை லிங்கா முறியடித்து 18 திரையரங்களில் வெளியானது. இதுவே இன்று [2015] வரை அதிகபட்ச திரையரங்கங்கள் வெளியீடு. படையப்பா, எந்திரன் தற்போது லிங்கா என்று திரைப்படங்களின் எண்ணிக்கையின் சாதனை தலைவர் திரைப்படங்களாலே தகர்க்கப்படுகிறது.

லிங்கா படத்திற்கு முதல் நாள் (12 மணி இரவுக் காட்சி) மட்டும் 20$ பின்னர் அடுத்த நாட்களில் இருந்து 18$ வசூலிக்கப்பட்டது. கோல்டன் வில்லேஜ், கேத்தே போன்ற ஒலி சிறப்பாக உள்ள மல்டி ப்ளெக்ஸ் ல் வெளியானதால் ரெக்ஸ் திரையரங்கம் கூட்டம் விரைவிலேயே குறைந்து விட்டது. லிங்கா படத்திற்குத் தான் முதன் முதலாக கூட்டத்தை சமாளிக்க பவுன்சர் எனப்படும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துபவர்களை மலேசியாவில் இருந்து அழைத்து இருந்தார்கள். சிங்கப்பூரில் ரசிகர்கள் சார்பாக பேனரும் வாழ்த்துகளும் அமைக்கப்பட்டு இருந்தன. படத்தைப்  பார்க்க வருகிறவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ரெக்ஸ் திரையரங்கம் லிங்கா டி ஷர்ட் விற்பனையும் செய்தார்கள். லிங்கா முதல் வாரம் பெரிய வசூலை ஈட்டினாலும் அதன் பிறகு சமூகத்தளங்களின் விமர்சனங்கள், தமிழக விநியோகஸ்தரின் மோசமான செயலாலும் ஊடகங்கள் பரப்பிய செய்தியாலும் வசூல் குறைந்து விட்டது. லிங்கா 160 கோடி வசூலித்தும் பலரின் பேராசை மற்றும் சில ஊடகங்களின் பொய் பிரச்சாரம் காரணமாக தோல்விப் படமாக பேசப்படுகிறது. 160 கோடி வசூலித்த படம் தோல்விப் படம் என்றால்...! இதில் மேலும் கூற என்ன இருக்கிறது!

தலைவர் போல இனியெல்லாம் எந்த நடிகரின் படங்களும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக சாதனை புரிய முடியாது. எவருமே அசைக்க முடியாத சாதனைகளை செய்து அமைதியாக இருக்கிறார். ரசிகர்களில் பலரும் தலைவர் என்னென்ன சாதனை செய்து இருக்கிறார் என்றே தெரியாமல் இருக்கிறோம். இந்தக் கட்டுரை ஓரளவு சிங்கப்பூரில் தலைவரின் சாதனைகளை தெரிந்து கொள்ள உதவி இருக்கும் என்று நம்புகிறோம்.

சிங்கப்பூரில் வெளியான தலைவர் படங்களின் அனைத்து விளம்பரங்களையும் பார்க்க இங்கே செல்லவும்.

http://rajinifans.com/boxoffice/singapore.php

குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் முன்னாள் ரசிகர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களாகும். உங்களுக்கு மேலும் தகவல்கள், படங்கள், குறிப்புகள், கட்டுரையின் தகவல்களில் மாற்றங்கள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

ரஜினிஃபான்ஸ் தளத்திற்காக எழுதியது 

கிரி 
www.giriblog.com






 
2 Comment(s)Views: 714

Vijay,India/Chennai
Wednesday, 4th March 2015 at 23:56:39

நிறைய விசயங்கள் சேகரித்து கொடுத்து உள்ளீர்கள் கில்லாடி. வாழ்த்துக்கள். நிறைய ரஜினி ரசிகர்களை சந்தோசப்படுத்தி இருக்கிறிர்கள்.
Vasantha Kumar,india chennai
Tuesday, 10th February 2015 at 12:53:17

தலைவா....

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information