சிங்காரவேலன் என்னும் மீடியேட்டரின் முகத்திரையை கிழித்த பத்திரிக்கையாளர் மேலும் கிழித்தெறிய ரசிகர்கள் எழுப்பும் உண்மை பதில்கள்..!
சிங்காரவேலனின் மதி கெட்ட சதி பத்திரிக்கையாளர் நடத்திய தொலைபேசி உரையாடலில் வெளிச்சத்திற்கு முற்றிலும் வந்து விட்டது. இந்த உரையாடல் ஆடியோ வடிவில் இணையத்தில் வெளிவந்து சிங்காரவேலனின் முகத்திரையையும் கிழித்துள்ளது.
ஒரு பத்திரிக்கையாளரின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் திணறிய இவனுடைய வார்த்தைகளே நமக்கு இவனை அடையாளம் காட்டியுள்ளது. சிங்காரவேலனும் ஒரு சில கேள்வியை இதில் கேட்டிருந்தான்(உளறியிருந்தான்). இவனுடைய குருட்டு கேள்விக்கு சாதாரண ஒரு ரஜினி ரசிகனின் பதிலே போதுமானது..
1.சிங்காரவேலன்: நன்றாக ஓடவேண்டிய படத்தை நான் தான் கெடுத்தேன் என்றால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா பின்பு இந்தியிலும் வெளியிட்டார்கள். ஆனால் எங்குமே ஓடலயே.
ரசிகன்: நீ கூறிய இந்த அணைத்து ஊரிலும் எந்திரனுக்கு பிறகும், எந்திரனை விட அதிக தியேட்டர்களிலும் லிங்கா திரையிடப்பட்டது.
*ஆந்திரா மாநிலத்தில் தமிழ் டப்பிங் படங்களில் எந்திரனுக்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படம் லிங்கா தான். இதை ஆந்திரா பாக்ஸ்ஆபிஸ் ஊடகங்கள் வசூல் புள்ளிவிவரங்களோடு தெரிவித்திருந்தது.நீ கூறிய கத்தி எல்லாம் இங்கு போனியே ஆகவில்லை.
*கர்நாடகாவில் 5வது வாரமாக லிங்கா ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இங்கும் அதிக தியேட்டர்களில் வெளிவந்த ஒரே தமிழ் படம் லிங்கா. உன்னைபோல் ஏமாற்றி பிழைப்பு நடத்த இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்து ஹிட் படம் என வணிக வரித்துறையினர் கூறியது அம்மாநில செய்தித்தாளிலே வந்தது. வசூலில் எந்திரனுக்கு பிறகு இம்மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த தமிழ் படம் லிங்கா தான்.
*கேரளாவிலும் கணக்கில் அடங்கா தியேட்டர்களில் வெளிவந்த லிங்கா 2014ல் கேரளாவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் டாப் 5ல் இடம் பிடித்துள்ளது. சுமார் 6 கோடிகள் அங்கு வசூல் செய்தது நம் தமிழ் படங்களின் ஹிட் படங்களுக்கு அங்கு கிடைக்கப்படும் வசூல் தான்.
*ஹிந்தி டப்பிங்கில் நம் தமிழ் படங்கள் திரையிடப்படுவதே அபூர்வம் தான். அப்படி இருக்க ஹிந்தியிலும் வெளியாகி சில கோடிகள் வசூல் பார்த்த படம் லிங்கா. எந்திரன், விஸ்வரூபம் படத்திற்க்கு பிறகு ஹிந்தியில் அதிக வசூல் செய்த படம் தமிழ் படம் லிங்கா தான்..
*வெளிநாடுகளிலும் லிங்கா படத்தின் வசூல் வெற்றியை நான் சொல்லி தெரிய வேண்டும் என்பதில்லை. நல்ல வேலை அங்கு எந்த சிங்காரவேலனும் இல்லை.
2.சிங்காரவேலன்: அவ்ளோ பெரிய சூப்பர்ஸ்டார் அவர். பல நாடுகளில் அவர் படம் ஓடுது. தற்போதைய இந்தியாவின் நொ.1 ஸ்டார். அவர் படத்தை இந்த சாதாரண சிங்காரவேலன் என்னும் நான் தடுத்து நிறுத்த முடியுமா..?
ரசிகன்: இன்றைய தேதியில் மீடியா பவர்புல் ஆயுதமாக இருக்கிறது. ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி அதற்க்கு இருக்கிறது. அதிலும் ரஜினியை பற்றி கிடைக்கும் சிறிய நற்செய்திகளும் சிறிய எதிர்மறை செய்திகளும் கூட அவர்களுக்கு கிடைக்கும் தீனி போல. அதுவும் எல்லோர் பையிலும் யூடியுப் வேறு உள்ளது. சிறிய கற்க்கள் கூட இங்கு மீடியாவால் பூகம்பாய் மாறும் போது, லிங்கா படத்தை வாங்கியிருக்கிறேன் எனக் கூறும் உன்னுடைய செய்திகள் மக்களிடம் சென்றடையதா..? படத்தை வாங்கியவேனே நஷ்டம் என்கிறான். தேர்வு விடுமுறையை நல்லா இல்லாத படத்திற்க்கு சென்று தான் செலவிட வேணுமா என மக்கள் நினைக்க மாட்டார்களா..?
3.சிங்காரவேலன்: திருச்சி-தஞசை பகுதிகளில் 5வது வாரம் வெளிவந்த லிங்கா படத்தின் விளம்பரம் போலி. அத்தனை தியேட்டரில் எல்லாம் ஓடவே இல்லை..
ரசிகன்: 5வது வாரத்தில் விளம்பரங்களில் கொடுக்கப்பட்ட தியேட்டர்கள் மொத்தம் 9. இந்த தியேட்டரில் எல்லாம் லிங்கா ஓடிக்கொண்டுதான் இருந்தது. நான் வேண்டுமானால் ஆன்லைன் புக்கிங் ஸ்கீரீன்ஷாட் எடுத்து அனுப்பட்டுமா..?
திருச்சி-தஞ்சை பகுதியின் விநியோகஸ்தர் என்னும் நீ, உனக்கே இப்படம் எத்தனை தியேட்டர்களில் அங்கு ஓடுகிறது என்று தெரியவில்லை.. பின்பு எப்படி அந்த ஏரியாவின் கலக்ஷன் மட்டும் தெரிகிறது..? ஓடும் தியேட்டரே தெரியாமல் வசூலை பற்றி பேச வந்துட்டியா..?
4.சிங்காரவேலன்:கத்தி படம் திருச்சியில் முதல் மூன்று நாளே 6 கோடி வசூல் பார்த்துவிட்டோம். லிங்கா 4 கோடி கூட முழுசா இன்னைக்கு வரைக்கும் தாண்டலயே..?
ரசிகன்: 7வது நாளே 4கோடி வசூல்னு சொன்ன மாதிரி இருக்கே.. இன்னைக்கு வரைக்கும் கத்தி படத்த விட திருச்சி பகுதிகளில் அதிக தியேட்டர்களில் 5வது வாரமாக ஓடிவரும் லிங்காவுக்கு, அந்த 4 கோடிக்கு அப்றம் 25 நாளா ஒருத்தனும் படம் பாக்க வரலனு சொல்றியா..? சரி அந்த பத்திரிக்கையாளர் தான் கத்தி படத்தால 30 கோடி நஷ்டம்னு சொல்றப்ப, "அது எப்படி நஷ்டம் ஆகும், எங்க ஏரியாவுலே 3நாள்ல இவ்ளோ வசூல் ஆச்சி, அப்றம் எப்படி 30 கோடி வரை நஷ்டமாகும்னு" நீ அவர்கிட்ட அடிச்சி பேசியிருக்க வேணாமா..? பதிலுக்கு உன் குரல் எதுக்கு உள்ள போகுது..? இதுக்கு மேலேயும் பேசுனா 6 கோடிக்கு கணக்கு காட்டனும்னா..?
5.சிங்காரவேலன்: விக்ரம் நடித்ந மஜா படம் ஓடவில்லை. நஷ்டம் என எனக்கு தெரிந்த விநியோகஸ்தர் சொன்னார். இந்த படத்தை வெளியிட்ட ராக்லைன் வெங்கடேஷிடம் நஷ்டஈடு வாங்கி தரமுடியுமா?
சுமார் 10 வருடத்திற்க்கு முன்பு வெளிவந்து நஷ்டம் ஏற்படுத்திய இப்படத்தை குறித்து அன்றே எந்த விநியோகஸ்தரும் கவலை கொண்டு ராக்லைனிடம் நஷ்டம் கேட்டதாக தெரியவில்லை. 10 வருஷம் கழிச்சி இப்ப வந்து நஷ்ட ஈடு வாங்கி தர முடியுமானு கேட்குற..
அதுக்காக உன்னை மாதிரி 7வது நாளே படம் ஓடலனு மீடியாவுல கொட புடிச்சா பொங்கல் வரைக்கும் போக வேண்டிய படம் எப்படி போகும்..? 7வது நாள்ல இருந்து 30வது நாள் வரைக்கும் நீ வாங்குன படத்துக்கு கலக்ஷன் வரனும்னு எதிர்பார்க்கமாட்டியா..? 7வது நாளே மொத்த நஷ்டத்தையும் வாங்கி 30வது நாள் வரைக்கும் படத்துல வர வசூலையும் நீ சுருட்டிக்லாம்னு ப்ளான் போட்டியா..?
6.சிங்காரவேலன்: திருச்சி-தஞ்சை பகுதிகளில் மூனு நாளைக்கு அப்றம் எந்த தியேட்டர்லயும் படத்துக்கு சுத்தமா ஆள் வரல..
ரசிகன்: பத்திரிகையாளர் திருச்சி LA சினிமாஸ்ல படத்த நான் 8வது நாள் பார்த்தேன் , படம் 70% புல்னு சொன்னாரு, அதை கேட்டதும் ஆமா திருச்சில அந்த தியேட்டர்ல மட்டும் படம் நல்ல ஓடிச்சின்னு பல்டி அடிக்குற. இப்படி தான் நீ இவ்ளோ நாளா ஊர ஏமாத்திகிட்டு இருந்தியா?
7.சிங்காரவேலன்: இப்பலாம் படத்துக்கு மூனு நாள் தான் பிஸ்னஸ். அதான் 7வது நாள் நஷ்டம்னு சொன்னேன்..?
ரசிகன்: 7 நாள் இல்ல.. 2 வாரம் வரைக்கும் நல்லாவே பிஸ்னஸ் இருக்கும். அதுவும் இல்லாம, நீ சொன்ன 7 நாள் ஸ்கூல் தேர்விலே போய்டிச்சி. பேமிலி ஆடியன்ஸ் அதுக்கு அப்பறம் தான் லீவ கழிக்க படம் பாக்க தியேட்டருக்கு வருவாங்க. உன்னால அவங்க சி.டிலேயே படத்த போட்டு பாத்ருப்பாங்க. கிறிஸ்துமஸ் படத்த கூட தாண்டி உங்க ஏரியாவுல எத்தனை தியேட்டர்ல ரெகுலர் ஷோவாவே படத்த போட்டாங்கனு உன் மனசாட்சிய கேட்டு பாரு. ஓடாத படம்னா மொத்தமா தூக்கிருக்கனும். இல்ல ஒரு ஷோ போட்டு ஓட்டிருக்கனும். உன் பிராச்சாரத்தையும் தாண்டி இந்த ரெண்டுமே லிங்காவுக்கு நடக்கலயே..!
ரஜினி படத்தை வாங்கினால் லாபம் மட்டுமே பார்க்கலாம், நஷ்டம் அடைந்தாலும் அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவார் என்றால், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எங்காவது கடன வாங்கி ரஜினி படத்தை திரையிடலாமே...? ரஜினி படத்தால் நஷ்டமும் அவர்களுக்கு கிடைக்காது, ரஜினி படத்தை வாங்கி திரையிட்ட பெருமைக்கும் பஞ்சமிருக்காதே. இதற்க்கு எதுக்கு சிங்கார வேலன் போன்ற என்கின்ற விநியோகஸ்தர் போர்வையில் இருக்கும் மீடியேட்டர் தேவை..?
-Paul Parveen
|