நாம் நினைத்தது நிஜமானது… லிங்காவுக்கு எதிராக மிகப் பெரிய சதி அரங்கேறுவதாக நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருவது நினைவிருக்கலாம். இதுகுறித்து புதிய தலைமுறை இதழில் நமது பேட்டியும் கடந்த வாரம் வெளியானதை நினைவூட்டுகிறோம்.
இந்த சதியின் பிரதான நோக்கம் என்ன? பின்னிருந்து இயக்குபவர்கள் யார்? என்றெல்லாம் நாம் மறைமுகமாக சில விஷயங்களைச் சொல்லி வந்தோம்.
இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
லிங்கா வெளியான நாளிலிருந்து அந்தப் படத்துக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்து வந்த திருச்சி – தஞ்சை கும்பலின் பின்னணியில் இருப்பது கூலிக்கு மாரடிக்கும் காமெடி பீஸ் சீமான் என்பது அம்பலமாகிவிட்டது.
மீடியாவில் இந்த திருட்டுக் கூட்டம் காட்டி வந்த வாய்ஜாலம் இப்போது எடுபடவில்லை. இது நியாயமற்ற கோரிக்கை என சில நியாயமான மீடியாக்காரர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்ததும், தன்னை ஏவி விட்டவர்களுடன் போய் கை கோர்க்கிறது இந்த திருட்டுக் கும்பல்.
யார் இந்த சீமான்?
‘தமிழ்ப் பிள்ளை விஜய்தான் சினிமாவை ஆள வேண்டும்.. தமிழகத்தை ஆள வேண்டும்’ என்று அணிலுக்கு வால் பிடித்து அலையும் ஆசாமி. இவரது ஆதரவில்தான் நாளை தலைவர் ரஜினிக்கும் அவரது லிங்கா படத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் மோசடிப் பேர்வழிகள்.
தலைவரின் ரத்தங்களே.. எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை இப்படியொரு நிகழ்வை நடத்த அயோக்கியர்களை அனுமதிக்கப் போகிறீர்களா?
-என்வழி
|